Home /News /tamil-nadu /

பூமிக்கு அடியில் 500 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கல் எடுக்கும் குவாரிகள்... உரிமைத்தை ரத்து செய்ய பொதுமக்கள் மனு

பூமிக்கு அடியில் 500 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கல் எடுக்கும் குவாரிகள்... உரிமைத்தை ரத்து செய்ய பொதுமக்கள் மனு

perambalur quarry

perambalur quarry

பெரம்பலூர் மாவட்டம்  திருவளக்குறிச்சி மற்றும் பெருமாள்பாளையம் கிராமத்திலுள்ளள்ள, குவாரி கிரசர் உரிமத்தை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொது மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சி மற்றும் பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுயிட்டு மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில்  திருவளக்குறிச்சி கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றோம், அப்பகுதியில் பல ஆண்டுகளாக, செயல்பட்டு வரும், இரண்டு குவாரி கிரசர்கள், பூமிக்கு அடியில் 500 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கல் எடுத்து வருகின்றனர், இதனால் அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து குவாரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், எம்சாண்ட் தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்டது போக மீதம் உள்ள கழிவுநீர் அப்பகுதியில் உள்ள ஏரிகளில் வெளியேற்றப்படுவதால், ஏரி அருகே உள்ள குடிதண்ணீர் கிணறு மாசு அடைந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது, இதனால் பெருமாள்பாளையம் கிராமத்தில் பலர் கிட்னி பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

விவாசய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள்... நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் போராட்டம்


ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுத்து, குடிநீரில் நச்சுத்தன்மை உள்ள தண்ணீர் கலப்பதை தடுத்து, குவாரி  உரிமத்தை ரத்து செய்து, அப்பகுதி விவசாயிகளையும், பொது மக்களையும் வாழ வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டு இந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வழங்கினார்கள்.

மேலும் இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், தற்பொழுது இறுதியாக நடவடிக்கை வேண்டி மனு கொடுத்துள்ளோம் இதன் மீது நடவடிக்கை இல்லை என்றால் ஓரிரு தினங்களுக்குள், தீர்வு இல்லை என்றால் கிராம பொது மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Perambalur, Quarry

அடுத்த செய்தி