Home /News /tamil-nadu /

Coronavirus Awareness | பெரம்பலூரில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் காவல்துறை.. ஊரடங்கை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்..

Coronavirus Awareness | பெரம்பலூரில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் காவல்துறை.. ஊரடங்கை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்..

வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் காவல்துறை

வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் காவல்துறை

பெரம்பலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் வணிகர்களுக்கு கொரோனோ தொற்று பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் தடுக்க வியாபாரிகள், உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பெரம்பலூர் நகரிலுள்ள வணிகர்கள் ஊரடங்கை முறையாக கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனோ தொற்று பரவல் குறித்தும், இதிலிருந்து தற்காத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் சுயகட்டுப்பாடு ஆகியவை குறித்தும் காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.

    மேலும் விற்பனை நேரத்தில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்கள், சாலயோர மற்றும் தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் படிக்க... Today Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 07, 2021)

    மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த காவல் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூட்டத்தில் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    செய்தியாளர்: ராஜவேல், பெரம்பலூர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Perambalur

    அடுத்த செய்தி