பெரம்பலூர் மாவட்டம் 36 எறையூர் கிராமத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் ஒருவர் தனக்கு பணி கேட்டு, பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர்மல்க மனு கொடுத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் 36 எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி செல்லம்மாள். குமார் அதே கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் இயக்குனராக பணியாற்றிய நிலையில், பணியில் இருக்கும்போது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கருணை அடிப்படையில் அவரது மனைவி செல்லம்மாளுக்கு துப்புரவு பணியாளர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.
தற்காலிக பணியாளராக ரூ.3000 மாத சம்பளத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில் செல்லம்மாளுக்கு பிறகு அதே துப்புரவு பணியில் சேர்ந்த பலருக்கும் பணி நிரந்தரம் செய்யப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தனக்கும் அதுபோல பணி நிரந்தரம் செய்து அதற்கான உத்தரவினை வழங்கிட வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு கொடுக்க கூடாது என்று மிரட்டுவதோடு, அவரை தற்காலிக பணியில் இருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டும் செல்லம்மாள் தனது மகள் மற்றும் மகனின் எதிர்காலம் கருதியும், அவர்களது கல்வி பாதிக்கும் என்பதாலும், தனது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தனக்கு பணி நிரந்தரம் வழங்குவதோடு, மாதாந்திர ஊதியமாக மற்றவர்களைப்போல ரூ.7000 நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர்மல்க மனு கொடுத்தார்.
அவரது மனுவை பெற்ற ஆட்சியர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் : ஆர் ராஜவேல் பெரம்பலூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Perambalur