Perambalur Farmars | கரும்பு அரவை காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்.. கோரிக்கை விடுக்கும் பெரம்பலூர் கரும்பு விவசாயிகள்

Perambalur Farmars | கரும்பு அரவை காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்.. கோரிக்கை விடுக்கும் பெரம்பலூர் கரும்பு விவசாயிகள்

பெரம்பலூர் கரும்பு தோட்டம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரவைப் பருவம் முடிவடைவதால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் அறுவடை செய்யப்படாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    பெரம்பலூர் உள்ள சர்க்கரை ஆலை 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த ஆலையை நம்பி, நடப்பு ஆண்டில் அப்பகுதியில் சுமார் 7000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு மகசூல் செய்யப்பட்டது. இதன் மூலம், இரண்டு 2,10,000 டன் கரும்பு அறுவடை செய்து அரவைக்கு அனுப்பி வைக்கலாம் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

    ஆனால், கரும்பு ஆலை நவீனமயமாக்கப்பட்ட போதும், இயந்திர பழுது ஏற்பட்டதால் நாள் ஒன்றுக்கு 2 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. இதனால், எதிர்பார்த்த அளவில் கரும்பு அறுவடை செய்ய முடியாமல் போனதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில், திங்கட்கிழமையுடன் அரவை பணி முடிந்து, பராமரிப்பு செய்வதற்காக கரும்பு ஆலையை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கரும்பு பயிரிட்டு 16 மாதங்களை கடந்ததால், காய்ந்து வீணாகி, ஏக்கருக்கு 55000 ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைந்துள்ள கரும்புகள் வயலிலேயே காய்ந்து சருகாவதாகவும், அதற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் திண்டாடி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் படிக்க... All-Party Meeting | முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்... ஆக்சிஜன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து பேசப்படும் என தகவல்

    அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகள் அனைத்தையும், அரவைக்கு கொண்டு வர ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அதுவரை, பெரம்பலூர் கரும்பு ஆலை தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

     செய்தியாளர்: ராஜவேல், பெரம்பலூர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: