ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு சடலம்.. பெரம்பலூரில் அதிர்ச்சி

தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு சடலம்.. பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர்

பெரம்பலூர்

பெண் சிசுவின் பெற்றோர் யார்எதற்காக அங்கு கொண்டு வந்து குழந்தையை வீசிச் சென்றனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள மறவநத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஏரிக்கு செல்லும் சாலையின் ஓரம் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சடலத்தை நாய்கள் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த நிலையில் அந்த சடலம் இருந்துள்ளது. அந்த பெண் குழந்தை உயிருடன் கொண்டு வந்து போடப்பட்டு நாய்கள் கடித்ததால் உயிரிழந்ததா அல்லது உயிரிழந்த சடலத்தை கொண்டு வந்து யாரேனும் போட்டு விட்டு சென்றார்களா என்பது உடனடியாக தெரியவில்லை.

மேலும் சடலத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெண் சிசுவின் பெற்றோர் யார்.. எதற்காக அங்கு கொண்டு வந்து குழந்தையை வீசிச் சென்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Must Read : நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை நீக்கிய சமந்தா - காரணம் இது தானாம்

ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கிராம பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உயிரிழந்த பெண் குழந்தையின் சடலம் தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மறவநத்தம் கிராம பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ஆர்.ராஜவேல் (பெரம்பலூர்)

First published:

Tags: Crime News, Death, Infant, Perambalur