Home /News /tamil-nadu /

105 சவரன் தங்கம்.. 9 கிலோ வெள்ளி - நகைக்கடைகாரர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

105 சவரன் தங்கம்.. 9 கிலோ வெள்ளி - நகைக்கடைகாரர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

பெரம்பலூர் கொள்ளை சம்பவம்

பெரம்பலூர் கொள்ளை சம்பவம்

பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் முகமூடி அணிந்த நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பலூரில் பிரபல நகைக்கடை உரிமையாளரை கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டிய மர்மநபர்கள், ரூ.60 லட்சம் மதிப்பிலான, 105 சவரன் தங்கநகை 9கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொகுசு காரையும் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பலூரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரான கருப்பண்ணன்(65). இவருக்கு பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகேயுள்ள சர்ச் ரோட்டில் பூர்வீக வீடு உள்ளது. அதே போல எளம்பலூர் சாலையில் உள்ள ஜூவல்லிரியின் மாடியிலும் ஒரு வீடு உள்ளது. சங்குப்பேட்டை வீட்டில் கருப்பண்ணன் மட்டும் இரவு தங்கியுள்ளார். இவரது மகள் ரேணுகா(32) மனைவி பரமேஸ்வரி(55) ஆகியோர் எளம்பலூர் சாலையில் நகை கடையின் மேல் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர். இவரது மகன் ஆனந்த் வேலை விஷயமாக திருச்சி சென்று விட்டார்.

    Also Read: காதல் வளர்த்த சின்னதம்பி.. போன்..டூவிலருடன் கம்பி நீட்டிய இளம்பெண் - ஷாக் கொடுத்த குடும்பம்

    இந்நிலையில் மகன் வந்துவிடுவதாக கூறியதால், கருப்பண்ணன் தனது வீட்டின் கதவை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இரவு 11 மணியளவில் முகமூடி அணிந்த நிலையில், உள்ளே சென்ற 3 மர்ம நபர்கள், அப்போது வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர் அவரிடம் இருந்து பீரோ சாவியை வாங்கி, அதனை திறந்து பீரோவில் இருந்த நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 105 சவரன் தங்க நகைகளையும், 9 கிலோ வெள்ளி பொருட்களையும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம்  ஆகியவற்றையும் கொள்ளையடித்துள்ளனர்.

    மேலும் சத்தம் போடக்கூடாது என்று மிரட்டிய கொள்ளையர்கள், கருப்ண்ணனனின் வீட்டு வாசலில் நின்றிருந்த சொகுசு காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கருப்பன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடய அறிவியல் சோதனையும், மோப்பநாய் சோதனையும் செய்யப்பட்டுள்ளது.

    Also Read: அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 கோடி மேல் மோசடி: ஏமாற்று தம்பதி கைது

    வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பழுதாகி விட்டநிலையில், சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி நேரில் வந்து விசாரணை நடத்தினார். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. வீடுகள் மிகவும் நெருக்கமாகவும், 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நகரின் மையப் பகுதியில், நடந்த இந்த கொள்ளை சம்பவத்தினால் பெரம்பலூரில் பொதுமக்களிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

    செய்தியாளர்: ஆர்.ராஜவேல் ( பெரம்பலூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV Footage, Crime | குற்றச் செய்திகள், Gold, Jewels, Money, Perambalur, Police, Tamil News, Theft

    அடுத்த செய்தி