சிறுமியை குடிபோதையில் கொடூரமாக தாக்கிய தந்தை - அரைமணிநேரத்தில் ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்

சிறுமியை தாக்கும் தந்தை

குடி போதையில் வந்த ரமேஷ் காரணம் எதுவும் இன்றி  சிறுமியை தனது மகளை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

  • Share this:
    காண்போர் நெஞ்சை கலங்க செய்யும் வகையில், குடிபோதையில் 7 வயது சிறுமியை பெற்ற தந்தையே அடித்து உதைத்து தாக்கும் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட அரை மணி நேரத்தில்  நடவடிக்கை எடுத்து சிறுமியை மீட்ட காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகிக்கிற்கும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    பெரம்பலூர் தீரன் நகர் பகுதியில் வசிப்பவர் மணி -நல்லம்மாள் தம்பதியினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகன் ரமேஷ்(35) இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ள தியாகபெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா(32) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபடுவது ரமேஷின் வழக்கம். இதனால் வீட்டில் குடும்பத் தகராறு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரண்யா தனது இளைய மகளை அழைத்துக்கொண்டு புதுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 7வயது சிறுமி மட்டும் தாத்தா பாட்டியான மணி -நல்லம்மாள் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

    Also Read: வீட்டில் அரைநிர்வாண கோலத்தில் பெண் சடலம்.. மாயமான கணவன் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

    இந்நிலையில் ரமேஷ் நாள்தோறும் குடித்து விட்டு வந்து, விஷ்மிகாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதுகுறித்து பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் தட்டிக்கேட்டால், அவர்களிடம் ரமேஷ் தகராறு செய்வது வழக்கமாம். இந்நிலையில் நேற்று மாலை குடி போதையில் வந்த, ரமேஷ் காரணம் எதுவும் இன்றி   சிறுமியை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார். அடி மற்றும் வலி தாங்க முடியாமலும் சிறுமி கதறும் குரல் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ரமேஷுக்கு தெரியாமல் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

    இந்த வீடியோ பதிவு எமது செய்தியாளருக்கு கிடைத்த உடனேயே, இச்சம்பவம் குறித்து, பெரம்பலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு. எஸ்.மணி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அருள்செல்விக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கொடுத்த அரைமணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களுடன் வந்த  சிறுமி விஷ்மிகாவை மீட்டனர்.

    Also Read: வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் அழிப்பு: உள்ளாட்டையில் கடிதம்: தஞ்சாவூர் இளம்பெண் மரணத்தில் திருப்பம் - மூவர் கைது

    தொடர்ந்து சிறுமியை அவரது பாட்டி நல்லம்மாள் பாதுகாப்பாக தங்கவைத்து,  சிறுமியின் அம்மா சரண்யாவை வரவழைத்து அவரிடத்தில் விஷ்மிகாவை ஒப்படைத்து விடுவோம் என்றும், மேற்கொண்டு  குழந்தையை தாக்கியது குறித்து ரமேஷ் மீது யாராவது புகார் கொடுத்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை பெற்று தருவோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    செய்தியாளர் தகவல் கொடுத்த அரை மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து குழந்தையை நலமுடன் மீட்க உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.மணி,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அருள்செல்விக்கும் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் ரமேஷ் மீது மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விசாரித்த போது, வேலைக்கு சென்ற பிறகு குடித்து விட்டு வந்து பேத்தியை காரணமின்றி, ரமேஷ் தாக்குவதாகவும், தங்களால் ஒன்றும் செய்ய முடிவில்லை என்றும், சிறுமியின் தாத்தா மணி தெரிவித்தார்.

    செய்தியாளர்: ஆர்.ராஜவேல்
    Published by:Ramprasath H
    First published: