முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காரில் வந்த கொள்ளையர்கள்.. பூட்டிய வீட்டில் கைவரிசை - காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்

காரில் வந்த கொள்ளையர்கள்.. பூட்டிய வீட்டில் கைவரிசை - காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்

திருட்டு சம்பவம்

திருட்டு சம்பவம்

பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, கைவரிசையை காட்டிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

  • Last Updated :

பெரம்பலூரில் வடக்குமாதவி சாலை வெற்றி நகர் பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் நகராட்சி வடக்கு மாதவிசாலை வெற்றி நகர் பகுதியில் குடியிருந்து வருபர் முகமது இப்ராஹிம்(34). இவர் பெரம்பலூரில் துணி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், முகமது இப்ராகிம் மனைவி  ஜெயத்துன் என்பவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அதே பகுதியில் வசிக்கும் மாமியார் வீட்டில் நேற்று இரவு குடும்பத்துடன் தங்கியிருந்துள்ளார்.

Also Read:  வாஜ்பாய் பிறந்தநாளை கொண்டாட வந்த பாஜகவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இன்று காலை எழுந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்ற பார்த்த போது. வீட்டின் அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்தத 20 சவரன் தங்க நகை மற்றும் ரூ.38 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம திருடிச் சென்றது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து முகமது இப்ராஹிம் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் நகர போலீசார் வழக்கு பதிந்து, பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, கைவரிசையை காட்டிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று ஆய்வு செய்து அருகே இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்து விசாரணை செய்ததில் மர்ம நபர்கள் காரில் வந்து திருடி சென்றது தெரியவந்துள்ளது. பெரம்பலூர் நகர் பகுதியில் 8 லட்சம் மதிப்பிலான நகை ரோக்கப் பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்ப்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: ஆர்.ராஜவேல் (பெரம்பலூர்) 

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime News, Jewels, Theft