ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்டர் மீடியனில் மோதி உருண்டோடிய கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

சென்டர் மீடியனில் மோதி உருண்டோடிய கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கார் விபத்து

கார் விபத்து

அதிகாலை சுமார் 5.30 மணியளவில் வந்து கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இதில்,  சுமார் 100  அடி தூரம்  கார் உருண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகேயுள்ள விஜயகோபாலபுரம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சென்டர் மீடியனில் மோதி உருண்டதில் காரில் பயணம் செய்த கணவன் மனைவி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(45). திண்டுக்கலில் வசித்துவந்த  இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சிகளின் உதவி தணிக்கை அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி லதா(40) வாலிபால் கோச்சாக இருந்து வந்துள்ளார்.

  மேலும் லதாவின் அம்மாவான திருவாரூரைச் சேர்ந்த வேம்பு(65), லதாவின் அண்ணன் ராமச்சந்திரன்(44) மற்றும் கமலக்கண்ணனின் சித்தியான கோவையை சேர்ந்த மணிமேகலை(64) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களான இவர்கள் 5 பேரும்  காரில் திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.

  காரை கமலகண்ணன் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் பயணித்த கார் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகேயுள்ள விஜயகோபாலபுரம் பகுதியில்  இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் வந்து கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.

  இதையும் படிங்க: திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர்... உற்சாகத்தில் ரூ.500 நோட்டுகளை தூவிய நிர்வாகி

  இதில்,  சுமார் 100  அடி தூரம்  கார் உருண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கமலக்கண்ணன், அவரது மனைவி லதா மற்றும் லதாவின் அம்மா திருவாரூரைச் சேர்ந்த வேம்பு ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  கார் விபத்து

  மேலும் அவர்களுடன் பயணம் செய்த திருவாரூரைச் சேர்ந்த ராமச்சந்திரன்,  மணிமேகலை ஆகியோர் லேசான காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ராஜவேல்- பெரம்பலூர்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Accident, Car accident, Perambalur