முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிறுமி மீது ஒரு தலைக்காதல்.. கண்டித்த தந்தையை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற இளைஞர் - பெரம்பலூரில் பரபரப்பு

சிறுமி மீது ஒரு தலைக்காதல்.. கண்டித்த தந்தையை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற இளைஞர் - பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர்

பெரம்பலூர்

Perambalur | பெரம்பலூர் சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த வந்த இளைஞரை தட்டிக்கேட்ட பெற்றோர் மீது நாட்டு வெடிகுண்டு வீசமுயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெரம்பலூரில் சிறுமியை ஒரு தலையாக காதலித்து, கேலி செய்து வந்தவரை கண்டித்த தந்தை மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 23 நாட்டு வெடிகுண்டுகளை பரிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அரியலூர் சாலையில் 4 ரோடு அருகேயுள்ள கவுள்பாளையம், கலை நகரில் வசிப்பவர் ராஜ் மகன் தனபால்(24). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை செய்து வருகிறார். மேலும் கவுள்பாளையம் குடிசை மாற்று வாரியக்குடியிருப்பை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை தனபால் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனபால் அந்த சிறுமியை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

Also Read:  சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டலை சூறையாடிய திருநங்கைகள் - விழுப்புரத்தில் பரபரப்பு

இதனையடுத்து சிறுமியின் தந்தை, வாலிபர் தனலபாலின் பெரியப்பாவான செல்வம் என்பவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தனபாலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தனலபால் இன்று(19ம் தேதி) இரவு சிறுமியின் வீடு இருக்கும் தெருவில் குறுக்கும் நெடுக்குமாகப போய் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் தனபாலை திட்டி அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து சிறுதியின் தந்தையும், அவரது பெரியப்பாவும் சேர்ந்து, தனபால் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

அப்போது திடீரென ஆத்திரத்துடன் உள்ளே சென்ற தனபால், சிறுமியின் தந்தையையும், பெரியப்பாவையும் கொலை செய்து விடுவதாக கூறி தகாத வார்த்தைகளால் திட்டியபடி, வீட்டின் உள்ளே இருந்து நாட்டு வெடிக்குண்டு ஒன்றை எடுத்து வந்து, அவர்கள் மீது வீசி வெடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தனபால் அருகே நின்று கொண்டிருந்த அவரது தம்பி நந்தகுமார் என்பவர்(19) அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

Also Read: 2 வயது பெண் குழந்தை தொட்டிலுடன் சுவற்றில் அடித்துக்கொலை - தாயின் 2வது கணவர் கைது

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார், விரைந்து சென்று தனபாலை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்து 23 நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வழக்கு பதிந்து தனபாலுக்கு நாட்டு வெடிக்குண்டு கொடுத்தது யார், எங்கிருந்து வாங்கி வந்தார்.., எதற்காக வாங்கி வந்தார்., அல்லது அவரே தயார் செய்தாரா இதில் தொடர்புடையவர்கள் யார் யார்  என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ஆர்.ராஜவேல் (பெரம்பலூர்)

First published:

Tags: Attempt murder case, Crime News, Love, Perambalur, Tamil News