Home /News /tamil-nadu /

போங்க தம்பி அங்கிட்டு.. வெள்ளத்தில் சிக்கிய குரங்கு தானே நீச்சலடித்து கரை சேர்ந்தது

போங்க தம்பி அங்கிட்டு.. வெள்ளத்தில் சிக்கிய குரங்கு தானே நீச்சலடித்து கரை சேர்ந்தது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வெள்ளத்தில் சிக்கிய குரங்கை தீயணைப்பு துறையினர் காப்பாற்ற சென்ற நிலையில் குரங்கு நீச்சலடித்து கரை சேர்ந்தது.

    பெரம்பலூர் மாவட்டம் வெள்ளாற்றில் எஸ்.ஆடுதுறை அருகே வெள்ளாற்றில் நடுவே சிக்கிக்கொண்ட குரங்கினை தீயணைப்பு துறையினர் மீட்க முயற்சித்த நிலையில், குரங்கு தானாகவே நீச்சலடித்து கரையேறியது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதாலும், மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் பச்சமலைப்பகுதியில் அதிக அளவு மழை பெய்வதாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் பெரம்பலூர் - கடலூர் மாவட்டங்களுக்கு இடையே ஓடும் வெள்ளாற்றில் தற்போது கரைபுரண்டு வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் எஸ்.ஆடுதுறை அருகே வெள்ளப்பெருக்கு முன்னதாக ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்ற குரங்கு ஒன்று, திடீர் வெள்ளப் பெருக்கினால் கரையேற முடியாமல் நட்டநடு ஆற்றிலிருந்த கருவேல முள்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தது. இதனை ஆற்றின் மறு கரையில் இருந்து பார்த்த பொதுமக்கள் இது குறித்து கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கிக் கொண்டிருந்த குரங்கை மீட்க போராடினர்.

    அப்போது தீயணைப்பு நிலைய வீரர்கள் தன்னை காப்பாற்ற வருவதை உணராத குரங்கு, திடீரென வெள்ள நீரில் குதித்து, நீச்சலடிக்கத்தொடங்கியது. தொடர்ந்து தன்னந்தனியே நீச்சலடித்து, தன் உயிரை காத்துக்கொள்ள போராடிய குரங்கு ஒரு வழியாக எஸ்.ஆடுதுறை கரைப்பகுதியை அடைந்தது. இதனைத்தொடர்ந்து நிம்மதி பெருமூசசு விட்ட தீயணைப்பு வீரர் பத்திரமாக கரை திரும்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு  நிலவியது.

    செய்தியாளர் : ஆர்.ராஜவேல் ( பெரம்பலூர்) 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Flood, Flood warning, Monkey, Perambalur, Rain, Tamilnadu

    அடுத்த செய்தி