Home /News /tamil-nadu /

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்.. சிறுமியை சீரழிக்க திட்டம் தீட்டிய வாலிபர் - பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்.. சிறுமியை சீரழிக்க திட்டம் தீட்டிய வாலிபர் - பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்

பெரம்பலூர் சம்பவம்

பெரம்பலூர் சம்பவம்

பெண் குளிப்பதை வீடியோ எடுக்க உதவியாக இருந்த பெண் உட்பட் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெரம்பலூர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் உட்பட இரண்டு பேரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சமலை மகன் செல்வம்(33). இவர் பிஇ பொறியியல் பட்டம் படித்து விட்டு, அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகள் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினராக அதே ஊரைச்சேர்ந்த முத்துசாமி மனைவி மலர்க்கொடி(45) என்பவர் உதவியுடன் அதே ஊரைச்சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர், அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, செல்போன் மூலமாக வீடியோ எடுத்துள்ளார்.

    Also Read:  மதுஅருந்தும் ஆசையில் தப்பி ஓடிய கொலை குற்றவாளி.. திண்டாடிய போலீஸ் - குழித்துறையில் ருசிகர சம்பவம்

    அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டி, பாதிக்கப்பட்ட பெண்ணின் 10 ம் வகுப்பு படிக்கும் மகளை தனது ஆசைக்கு இணங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த பெண், இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், செல்வத்தையும், அவருக்கு உதவியாக பாதிக்கப்பட்ட பெண் எப்போது குளிக்க செல்கிறார். எங்கு நின்று செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்யலாம் என்பது குறித்து தகவல் கொடுத்து உதவிவிய மலர்க்கொடி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும்   இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர்.  இச்சம்பவத்தினால் கீழக்கணவாய் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆர்.ராஜவேல், பெரம்பலூர்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bathing, Crime News, Perambalur, Tamil News, Video

    அடுத்த செய்தி