Home /News /tamil-nadu /

பெரம்பலூர் கள்ளப்பட்டி கிராமத்தில் உற்சாகமாக நடைபெற் ஜல்லிக்கட்டு

பெரம்பலூர் கள்ளப்பட்டி கிராமத்தில் உற்சாகமாக நடைபெற் ஜல்லிக்கட்டு

 ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு போட்டி

Perambalur Jallikattu | பெரம்பலூர் மாவட்டம் கள்ளப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், திரளான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் கள்ளப்பட்டி கிராமத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 17ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணியளவில் துவங்கியது. போட்டியினை பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் துவக்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்திருந்த நிலையில், காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் மற்றும் கால்நடை துறையினரும் பாதுகாப்புடன் நிகழ்ச்சியை நடத்தினர்.

நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, கொரோனோ தோற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டது. இந் நிலையில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். இந்த போட்டியை விஸ்வகுடி, அண்ணமங்கலம். அரசலூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

ALSO READ |  IPL 2022 SRH vs RR-மோசடி தீர்ப்பில் ஒழிக்கப்பட்ட கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
 

வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், அவர்களுக்கு போக்குகாட்டி சென்று வெற்றியடைந்த காளைகளுக்கும், ரொக்கம், பாத்திரம், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆர் ராஜவேல், பெரம்பலூர்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Jallikattu, Perambalur

அடுத்த செய்தி