பெரம்பலூர் அருகே சமாதானம் பேச வந்த மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்!

பெரம்பலூர் அருகே சமாதானம் பேச வந்த மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்!

மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே மருமகனே மாமனாரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே மருமகனே மாமனாரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள  கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வம்(30), ரஞ்சிதா(27), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வத்திற்கும், ரஞ்சிதாவுக்கும்  அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

    மேலும் இரண்டு பேரும் அடிக்கடி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் செல்வம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், ரஞ்சிதாவும் அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தாய்வீட்டில் இருந்துள்ளார். வெளிநாடு சென்றிருந்த செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான கூடலூருக்கு வந்துள்ளார்.

    இதனையடுத்து, தாமரைகுளத்தில் இருந்து ரஞ்சிதாவை சமாதானம் செய்து, வைத்து கணவனுடன் சேர்த்து வைப்பதற்காக, ரஞ்சிதாவின் தந்தை செல்லமுத்து, தாய் பச்சையம்மாள்(50), பெரியப்பா கருப்பையன்(55), தாய்மானான ஆர்.எஸ்,மாத்தூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் உள்ளிட்ட சிலர் இன்று காலை கூடலூருக்கு வந்துள்ளனர். அப்போது இருதப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, திடீரென செல்வம் அவரது சகோதரர்களான ராஜதுரை, முத்துமணி, சேகர், முத்துமணியின் மகன் மணிகண்டன், மனைவி முத்துலட்சுமி, பெற்றோர்கள் பூமாலை, மலர்விழி ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

    இதில் நிலை குலைந்து போன ரஞ்சிதா உள்ளிட்ட அவர்களது உறவினர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். இருப்பினும் அவர்களை விரட்டிச்சென்று தாக்கியதில், செல்லமுத்து அதே இடத்தில் உயிரிழந்தார். மீதமுள்ளவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் விரைந்து வந்து செல்லமுத்துவின் சடலத்தைக்கைப்பற்றி பிரதே பரசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் டிஎஸ்பி சரவணன் தலைøயிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளில் செல்வம், சேகர், பூமாலை மற்றும் மலர்விழி ஆகியோரை கைது செய்து மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.

    செய்தியாளர் - ஆர்.ராஜவேல், பெரம்பலூர்
    Published by:Esakki Raja
    First published: