தையல் மிஷின் கேட்ட பெண் - மேல் படிப்புக்கு உதவி செய்வதாக நெகிழ்ச்சியடைய வைத்த அமைச்சர்!

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், மீண்டும் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகியிருக்கிறார்.

 • Share this:
  தையல் மிஷின் கேட்ட பெண்ணிடம் அதோடு சேர்த்து படிக்கவும் உதவி செய்கிறேன் என்று கூறி நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

  திமுக-வின் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். கடந்த 2011 - 2016-ம் ஆண்டிலும் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினாரக இருந்தார். அப்போது அத்தொகுதிக்கு உட்பட்ட கொள்ளப்பாடி கிராமத்திற்கு மக்கள் சந்திப்பு எனும் நிகழ்ச்சிக்காக சென்று வந்த போது, 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த செம்பருத்தி எனும் மாணவி தங்கள் கிராமத்திற்கு நூலகம் வேண்டும் எனக் கேட்க, தனது எம்.எல்.ஏ நிதியில் நூலகத்தைக் கட்டி, அந்த கட்டிடத்தை அதே செம்பருத்தியின் கையால் திறக்க வைத்து அழகுப் பார்த்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  தற்போது நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், மீண்டும் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகியிருக்கிறார். இந்நிலையில் அவர் செய்திருக்கும் இன்னொரு விஷயம் நெட்டிசன்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தொகுதி பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், ”12-ம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். தையல் மிஷின் தாங்க” என்று நரிகுறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உதவிக் கேட்க, அதற்கு அந்தப் பெண்ணிடம் "காலம் முழுவதும் தையல் மிஷினே வாழ்க்கையாகிடும். தையல் மிஷினும் தர்றேன், மேல் படிப்புக்கு உதவியும் செய்கிறேன். நல்லா படிச்சு நாலு பேருக்கு முன் மாதிரியாக இரு” என்று சொல்கிறார் அமைச்சர்.

  பெண் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய அமைச்சரின் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: