Home /News /tamil-nadu /

Annamalai | திமுகவினருக்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’ - பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

Annamalai | திமுகவினருக்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’ - பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

அண்ணாமலை

அண்ணாமலை

திமுகவினர் பொய்யையே பேசி காலத்தை ஓட்டி வருகின்றனர் என்ற அண்ணாமலை, கொரோனோ தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு நேரடியாகவும் வாங்கிக் கொள்ள முடியும். இதுவரையில் எவ்வளவு தடுப்பூசியினை தமிழக அரசு வாங்கியுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்கவும் ...
  திமுகவினருக்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’ என்றும், எதிர்க்கட்சியாக இருந்த போது, ஒரு திட்டத்தை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாக இருக்கும் போது அதையே நடைமுறைபடுத்துவதும் அவர்களது வழக்கம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  பாரதிய ஜனதா கட்சியின் மதுரை பெருங்கோட்ட, மாவட்ட மையக்குழு மற்றும் மண்டல தலைவர்கள் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அவரிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்காமல் உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை கடந்த ஆட்சியின் போது எதிர்த்த திமுக தற்பொழுது அதையே பின்பற்றுகிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  Also Read : கோவையில் மாயாமான 10-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு

  அதற்கு அவர், திமுகவினருக்கு செலக்டிவ் அம்னீசியா. அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு விஷயத்தை எதிர்ப்பார்கள்; ஆளும் கட்சியாக மாறினால், அதையே ஏற்றுக்கொண்டு செய்வார்கள் என்று தெரிவித்தார். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, முற்றிலுமாக மாறியுள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும். காரணம் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அலைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் வேண்டுகோள் என்றார்.

  வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி கண்டிப்பாக தொடரும் அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை என்றார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான கேள்விக்குபிற்படுத்தப்பட்டவர்களுக்கு நலத்திட்டங்கள், சலுகைகள் கிடைப்பதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்கு எங்களது ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றார்.

  இதையும் படிங்க: தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி - ராதாகிருஷ்ணன்


  தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பரவி வரும் கோமாரி நோயை தடுப்பதற்கான தடுப்பு ஊசிகள் ஏராளமாக மாவட்ட வாரியாக மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு அதனை மூடி மறைத்துள்ளது. இதேபோல தான் கொரோனோ தடுப்பிற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு முறையாக வழங்கி வந்த நிலையில், மத்திய அரசு தடுப்பூசி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய திமுக அரசு பிறகு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியது என்று மாற்றி கூறினார்கள்.

  திமுகவினர் பொய்யையே பேசி காலத்தை ஓட்டி வருகின்றனர் என்ற அண்ணாமலை, கொரோனோ தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு நேரடியாகவும் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இதுவரையில் எவ்வளவு தடுப்பூசியினை தமிழக அரசுவாங்கியுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

  மேலும் படிக்க: அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது


  திமுக, ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதை மறந்து தற்பொழுது ‘கட்டுமணி, கமிஷன், கரப்ஷன்’, என ட்செயல்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்த அண்ணாமலை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டு 150 மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டினை ஏதேதோ காரணம் சொல்லி தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றார். இதனால் பலஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போனதோடு, 150 மருத்துவர்களையும் தமிழ்நாடு இழந்து விட்டது என குற்றம் சாட்டினார்.

  செய்தியாளர்: ஆர்.ராஜவேல்
  Published by:Murugesh M
  First published:

  Tags: Annamalai, BJP

  அடுத்த செய்தி