பெரம்பலூர் நகரில் இன்று அதிகாலை திருட முயன்ற இரண்டு நபர்களில் ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஆத்தூர் சாலையில் உள்ள ரங்கா நகர் பகுதியில் வசிப்பவர் பேக்கரி உரிமையாளரான கோபிநாத். இவரது வீடு அருகே வசிப்பவர் செல்வராஜ், இவரது வீட்டின் மாடியில் கவியரசன் மற்றும் குமார் ஆகிய இருவரும் வாடகைக்கு தங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் திருடர்கள் இரண்டு பேர், கோபிநாத் வீட்டின் கதவை உடைக்க முயற்சித்து முடியாமல் போனதால், செல்வராஜ் வீட்டின் மாடி பகுதிக்கு சென்று செல்வராஜ் பயன்படுத்திவரும் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரது சட்டைப்பையில் இருந்த, ரூ.2 ஆயிரம் ரொக்க பணத்தையும், கவியரசன் வீட்டில் ஆள் இல்லாததால் அவரது வீட்டை உடைத்து உள்ளே இருந்து ரூ.1500 ரொக்கப் பணத்தை திருடியுள்ளனர்.
Also Read: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாயத் தனிமை - அமைச்சர் அறிவிப்பு
கவியரசன் வீட்டில் திருடும் பொழுது அங்கிருந்த பழைய டிவி கீழே விழுந்து உடைந்ததில் டமார் என்று சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த குமார் வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது இரண்டு நபர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். அதில் ஒருவரை குமார் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் கையும் களவுமாக பிடித்தனர். மற்றொருவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடி விட்டார். இதனையத்தொடர்ந்து பிடிபட்ட நபரை பெரம்பலூர் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Also Read: தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்..
முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் பெயர் அப்துல்மாலிக் என்று என்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் தப்பியோடிய நபர் யார். இவர்கள் இங்கு இப்படி வந்தார்கள், வேறு எங்கெல்லாம் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் நகர் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களினால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் இரண்டு திருடர்களில் ஒருவர் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ஆர்.ராஜவேல் (பெரம்பலூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Money, Perambalur, Robbery, Theft