டீக்கடையில் வடை போட்டு வாக்கு சேகரித்த பெரம்பலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளார்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் கு.ராஜேந்திரன் டீ கடையில் வடை சுட்டு நூதனமுறையில் வாக்குச் சேகரித்தார்.

 • Share this:
  பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகின்றது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளராக கு.ராஜேந்திரன் என்பவர் போட்டியிடுகின்றார். இன்று வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசலூர், அன்னமங்களம், விஷ்வகுடி, முகமதுப்பட்டினம், பிள்ளையார்பளையம், தொண்டமாந்துறை, ஈச்சங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன், வீதி வீதியாக சென்று, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, வாக்காளர் காலில் விழுந்து முரசு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  மேலும் படிக்க... மதுரை - குமரி இடையிலான சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு...

  தொண்டமாந்துறை பகுதியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த வேட்பாளர் ராஜேந்திரன், அங்குள்ள டீக்கடை ஒன்றில் தீடீரென வடை போட்டு வாக்காளர்களை கவரும் விதமாக செயல்பட்டார். அவருக்கு கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: