ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சொட்டு நீர் பாசனத் திட்டம்.. விவசாயிகளுக்கு முதல் தவணை மானியம் வழங்க ரூ.261 கோடி ஒதுக்கீடு

சொட்டு நீர் பாசனத் திட்டம்.. விவசாயிகளுக்கு முதல் தவணை மானியம் வழங்க ரூ.261 கோடி ஒதுக்கீடு

மாதிரி படம்

மாதிரி படம்

ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் திட்டத்துக்கு ரூ.960 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் முதல் தவணை மானியம் வழங்க ரூ.261 கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தண்ணீரை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பிரதம மந்திரி கிருஷி சின்சாயி திட்டம்.

பிரதம மந்திரி கிருஷி சின்சாயி திட்டத்தின் கீழ் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.960 கோடி நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான திட்டமான சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளுக்கு முதல் தவணை மானியம் வழங்க ரூ.261 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் பாய்ச்சும் கருவிகளை வாங்க சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு 100 % மானியம் வழங்குகிறது

மாநில அரசு சார்பில் ரூ.641 கோடி, மத்திய அரசு சார்பில் ரூ.319 கோடி மொத்தமாக ரூ.960 கோடி ஒதுக்க நிர்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதோடு, சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு முதல் தவணை மானியம் வழங்க மாநில அரசு சார்பில் ரூ.181 கோடி, மத்திய அரசு சார்பில் 80 கோடி என 261 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Agriculture, Farmer, PM Modi, Tamil News