மக்கள் சார்ந்த வளர்ச்சியே கொள்கையாக இருக்க வேண்டும்: பேராசிரியர் ஜெயரஞ்சன்

முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்

துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு கொடுக்கப்படும் வரவேற்பை பார்த்து மிரட்சியாக உள்ளாதவும், அதற்கான உரிய பணியை செய்வோம் என்று பேராசிரியர் ஜெயரஞ்சன் தெரிவித்தா். 

 • Share this:
  மக்கள் சார்ந்த வளர்ச்சியே மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் கொள்கையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாக அதன் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

  மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் குழுவின் துணைத்தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும், குழு உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயரஞ்சன், எல்லா உறுப்பினர்கள் வந்த பிறகு முதலமைச்சரை மீண்டும் சந்தித்து, மாநில கொள்கை வகுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும் என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுவரை வெளியில் பேசிக்கொண்டும், புள்ளிவிபரங்களை வைத்து ஆய்வு செய்து வந்த தங்களுக்கு முதலமைச்சர் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என்றார்.  துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு கொடுக்கப்படும் வரவேற்பை பார்த்து மிரட்சியாக உள்ளாதவும், அதற்கான உரிய பணியை செய்வோம் என்று பேராசிரியர் ஜெயரஞ்சன் தெரிவித்தா்.

  மேலும், மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பணி, மக்கள் சார்ந்த வளர்ச்சியாக இருக்கவேண்டும். இதற்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யவேண்டும் இதை தான்  முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: