3 கி.மீ நீள வரிசை... காஞ்சி அருகே காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச்செல்லும் குடிமக்கள்...!

3 கி.மீ நீள வரிசை

உள்ளூர் மக்களை தவிர சென்னை ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த யாராவது மதுபானம் வாங்க வந்தால் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் மற்றும் கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் காத்திருந்து பொதுமக்கள் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு மதுபான கடைகளை இன்று காலை 10 மணி முதல் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தனிமை படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மாவட்டத்தில் 16 அரசு மதுபான கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

  அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 16 கடைகளிலும் சமூக இடைவெளியுடன் மதுபான பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

  வரிசையில் அமர்ந்துள்ள குடிமகன்கள்


  காலை 10 மணி முதல் அரசு மதுபான கடைகளில் விற்பனை துவங்கிய  நிலையில் ஒவ்வொரு கடையிலும் 25 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

  மேலும் மதுபானம் வாங்க வருபவர்கள் உள்ளூர் மக்களாகவும் அதற்குண்டான அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவித்துள்ள நிலையில் ஒவ்வொரு மதுபான பிரியர்களுக்கும் 4 மது பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் மற்றும் கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மதுபானங்களை வாங்க பொது மக்கள் ஏராளமாக திரண்டதால் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.  உள்ளூர் மக்களை தவிர சென்னை ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த யாராவது மதுபானம் வாங்க வந்தால் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  படிக்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை விபரங்கள் வெளியீடு - முழு பட்டியல்
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: