• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அத்திவரதர் உற்சவம்... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... பாதுகாப்பு குறித்து ஆணையர்கள் ஆய்வு

அத்திவரதர் உற்சவம்... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... பாதுகாப்பு குறித்து ஆணையர்கள் ஆய்வு

அத்தி வரதர்

அத்தி வரதர்

முன்னதாக தரிசனத்தின் போது 4 பேர் உயிரிழந்ததால், இன்று 10-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும், 1 மருத்துவர், 4 செவிலியர்கள் என மொத்தம் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அத்திவரதர் உற்சவத்தின் 21-ம் நாளான இன்றும், அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முதலமைச்சர் உடனான ஆலோசனையைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஐந்து இணை ஆணையர்கள் ஆய்வு நடத்தினர்.

21-ம் நாள் உற்சவத்தையொட்டி, இன்று அத்தி வரதருக்கு ஊதாநிற பட்டு உடுத்தப்பட்டு, வண்ண வண்ண மலர்களால் ஆன பூமாலை சாத்தப்பட்டது.

விடுமுறை தினம் என்பதால், அதிகாலை 5 மணி முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்றைய தினம் மட்டும் 1,40,000 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்றும் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

250-க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக தரிசனத்தின் போது 4 பேர் உயிரிழந்ததால், இன்று 10-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும், 1 மருத்துவர், 4 செவிலியர்கள் என மொத்தம் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த 5 இணை ஆணையர்கள் இன்று ஆய்வு நடத்தினர்.

கடந்த 20 நாட்களில் மொத்தம் 28, 20,000 பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

Also Watch: வேண்டாம் என்று பெயரிடப்பட்ட பெண்ணின் சாதனை 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: