Home /News /tamil-nadu /

அமைச்சர் பரிந்துரைத்தாலும் எகிப்து வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டும் இல்லத்தரசிகள்...!

அமைச்சர் பரிந்துரைத்தாலும் எகிப்து வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டும் இல்லத்தரசிகள்...!

அமைச்சர் பரிந்துரைத்தாலும் எகிப்து வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டும் இல்லத்தரசிகள்...!

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    எகிப்து வெங்காயத்தை இல்லத்தரசிகளை விட, உணவு விடுதிகள், திருமண விருந்துகளுக்கு வாங்குபவர்களே அதிகம் உள்ளனர். விலை அதிகரித்தாலும் நம்ம ஊரு வெங்காயத்திற்கே அதிக மவுசு இருந்துவருகிறது.

    எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என்று கூட்டுறவு துறை அமைச்சர் கூறினாலும் மக்கள் அதை வாங்கத் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். வெங்காயத்தின் அளவு பெரியதாக இருப்பதும், கருஞ்சிவப்பான அதன் நிறமும் இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

    ஒரு கிலோவுக்கு 3 வெங்காயம் மட்டுமே கிடைப்பதால் சமையலுக்கு உகந்ததாக இல்லை என்பது இல்லத்தரசிகள் சொல்லும் காரணம். 100 ரூபாய்க்கு வெங்காயம் வாங்கி சாம்பார் வைக்க மட்டும் அதைப் பயன்படுத்துவதா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

    கோயம்போடு போன்ற பெரிய சந்தையில் மட்டுமல்ல, சில்லறை விற்பனையிலும் எகிப்து வெங்காயத்திற்கு வரவேற்பு இல்லை. இதனால், பெங்களூர், மகாராஷ்ட்ராவில் இருந்து கொண்டுவரப்படும் வெங்காயத்திற்கே சில்லறை வியாபாரிகள் முன்னுரிமை தருகின்றனர்.

    இல்லத்தரசிகள். சில்லறை வியாபாரிகள் இப்படிச் சொன்னாலும், எகிப்து வெங்காயம் பயன்படுத்துவது எளிதாக இருப்பதால் ஹோட்டல்களுக்கு, திருமண நிகழ்வுகளுக்கு அதிகம் வாங்கப்படுவதாகச் சொல்கிறார் கோயம்பேடு வியாபாரி அஜித்குமார்

    வெங்காய தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக சுமார் 40 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
    Published by:Sankar
    First published:

    Tags: Onion, Onion Price

    அடுத்த செய்தி