என்.பி.ஆர் கடிதம் கேட்ட வங்கி! எதிர்ப்பு தெரிவித்து சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுக்க குவிந்த மக்கள்

என்.பி.ஆர் கடிதம் கேட்ட வங்கி! எதிர்ப்பு தெரிவித்து சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுக்க குவிந்த மக்கள்
சென்ட்ரல் வங்கி
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெற மக்கள் கூடியதால் பரபரபரப்பு ஏற்பட்டது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நாளிதழில் வாடிக்கையாளர்கள் கே.ஒய்.சி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் கே.ஒய்.சி ஆவணங்கள் பட்டியலில் தேசிய மக்கள் பதிவேட்டில்(என்.பி.ஆர்) வழங்கப்பட்ட கடிதமும் இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே செயல்பட்டுவரும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் வங்கியின் கிளையில் தேசிய மக்கள் பதிவேடு கடிதம் கேட்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெற ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் தான் தேசிய மக்கள் பதிவேட்டிற்கான கணக்கெடுப்பு தொடங்கவுள்ளது. மேலும் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வங்கி வெளியிட்ட இந்த அறிவிப்பு வாட்சப்பில் பரவியதால் கடந்த சில தினங்களுக்கு முன் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெற ஒரே நேரத்தில் வந்ததால் வங்கி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.


இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்தால் போதும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, வங்கிக் கணக்கியிலிருந்து NPR கடிதம் கேட்டதற்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், ‘நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நடவடிக்கையை கண்டித்து அந்த வங்கியை அனைவரும் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’என்று குறிப்பிட்டிருந்தார்.

Also see:

 
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்