பா.ஜ.க வை  இந்த தேர்தலுடன் மக்கள் அகற்றுவார்கள் - தினேஷ் குண்டுராவ் 

பா.ஜ.க வை  இந்த தேர்தலுடன் மக்கள் அகற்றுவார்கள், அதை தான் கருத்து கணிப்பு முடுவுகள் காட்டுவதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ராகுல்காந்தி வரும் 28ம் தேதி தமிழகம் வருவதாகவும், காலை 11.30 மணியளவில் வேளச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதன் பின், சேலம் சென்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக  தெரிவித்தார்.

மேலும், மக்கள் பாஜக ஆட்சியில் சிரமம் அடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்கள் பாஜக வை இந்த தேர்தலோடு  அகற்றி விடுவார்கள் என்றும், அதை தான் கருத்து கணிப்புகளும் கூறுகிறது. பீகார் தேர்தலிலும் கருத்து கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்தது குறித்த கேள்விக்கு, என்ன செய்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

 
Published by:Vijay R
First published: