ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'காதுல, கழுத்துல இருக்கறத வித்து கஞ்சி குடிக்கிறோம்...' கடற்கரை வியாபாரிகளின் கண்ணீர் கதைகள்

'காதுல, கழுத்துல இருக்கறத வித்து கஞ்சி குடிக்கிறோம்...' கடற்கரை வியாபாரிகளின் கண்ணீர் கதைகள்

லதா மற்றும் மலர்

லதா மற்றும் மலர்

சென்னையில் கடற்கரைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் கடைகள் போட்டு வியாபாரம் செய்து வந்தவர்கள், வருமானம் எதுவுமின்றி வறுமையில் வாடி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னையில் கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் மெரினா கடற்கரை,  பெசன்ட் நகர்,  பாலவாக்கம்,  திருவான்மியூர்  உள்ளிட்ட  அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், கடற்கரைகளில் மீன் வியாபாரம், ஐஸ் கடை, பஜ்ஜி கடை என தள்ளு வண்டி கடைகள், சிறு கடைகளில் வியாபாரம் செய்து வந்த வந்தவர்கள் வருமானம் இன்றி வறுமையில் வாடி வருகினறனர்.

மெரினா கடற்கரையில் 10 ஆண்டுகளாக பஜ்ஜி வியாபாரம் செய்து வரும் லதா கூறுகையில், “மகன் மீன் கடை போட்டுருக்கான். நான் பஜ்ஜி கடை 10 வருஷமா போட்டுட்டு வர்றேன்.

அரசு கொடுக்கற 1000 ரூபாய், ரேசன் அரிசி மட்டும் போதாது. வேறு வருமானமும் எதுவும் இல்ல. நான் காதுல, கழுத்துல போட்டுத்து இருந்தத வித்து கஞ்சி குடிச்சுட்டு இருக்கோம்.

வீட்டு வேலைக்கு போய் கேட்டாலும், எங்கள வீட்டுக்குள்ள விட பயப்படறாங்க. இனி எப்ப பீச்சு திறக்கும்னு தெரியல. இப்படியே எவ்வளவு நாள் ஓட்ட முடியும் எனவும் தெரியவில்லை. நாங்க எல்லாம் தினமும் வேலை பார்த்து கிடைக்கிற காசுல வாழ்றவங்க. நாங்க ரொம்ப கஷ்டம் படறோம்,” என்றார்.

Also read... சென்னையில் பாதிப்பை விட அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை

அதேபோல், மெரினா கடற்கரையில் மீன் வியாபாரம் செய்யும் மலர் கூறுகையில், “வண்டிக்கடையில் மீன் வியாபாரம் செஞ்சுட்டு வந்தேன். மத்த தொழில் எல்லால் திறந்துட்டு வர்றாங்க. ஆனா பீச்சு எல்லாம், திறந்துவிடற மாதிரி தெரியல.

வேற இடத்துல போய் கடையும் போடமுடியல. போலீஸ் போடக்கூடாதுனு சொல்றாங்க. என் வீட்டுக்காரரும் மீன் பிடிக்க கடலுக்கு போக முடியல. நாளு பசங்க இருக்காங்க. எப்படி வாழப்போறோம்னு தெரியல,” என்றார்.

இதுபோல் கடற்கரையை நம்பி வாழும், பல தரப்பு மக்கள் தங்களது கண்ணீர் கதைகளை வேதனையுடன் பகிர்ந்து கொண்டனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lockdown