கோவையில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் கடுமையான வெயில் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால், யானைகள் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் நீரை தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாகி உள்ளது.
இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூரை அடுத்த குப்பேபாளையம் கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து நேற்று காலை குட்டி யானை உட்பட 5 யானைகள் வனத்தை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் வந்தது.
தொடர்ந்து, அங்குள்ள விவசாய நிலங்களுக்கு புகுந்த யானைகள் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தியது.பின்னர் மின்வேலியை உடைத்து கொண்டு ஊருக்குள் சுற்றி திரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையிருக்கு தகவல் கொடுத்தனர்.
உடல்நலன் பாதித்து மயங்கி கிடந்த பெண் யானைக்கு சிகிச்சை அளித்த தமிழக வனத்துறையினர்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், ஊருக்குள் புகுந்த யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஊர் மக்கள் வயலுக்குள் இருந்து சாலையை நோக்கி செல்ல யானைக்கு வழி சொன்னபடி, அவை பத்திரமாக செல்ல கூச்சலிட்டு வழிகாட்டி வந்தனர். இறுதியாக மின்வேலியை தாண்டி யானைகள் சாலைகளை அடைந்தன.
Z class security for adorable Kutty (baby) elephants by the elephant family. I can hear villagers say empathetically 'let the kutty go'..absolutely heartwarming ❤️ vc-a forward pic.twitter.com/kRGeh9J0ls
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 24, 2022
யானைகள் வெளியேறும் காட்சிகளை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோக்களில், அவர்கள் அக்கறையுடன் அதனை வெளியேற்றும் குரல்கள் கேட்கின்றன.
அதில், யானைகள் செல்லும் பாதையில் மின் வேலி இருப்பதைப் பார்த்த விவசாயிகள் சிலர், ‘அந்த வழியாக மின்வேலி இருக்கு. பாத்து போங்க சாமி என்று அன்புடன் அறிவுறுத்துகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Elephant, Forest