1947-க்கு பின் பிறந்தவர்களுக்கு சுதந்திரப் போராட்டம் குறித்து தெரியவில்லை - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை உயர்நீதிமன்றம்

மக்களுக்கு சுதந்திர போராட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை சுதந்திரத்தால் கிடைத்துள்ள பலனை அனுபவித்து வருகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

 • Share this:
  1947ம் ஆண்டுக்குப் பின் பிறந்த பலருக்கு சுதந்திரப் போராட்டங்கள் எவ்வாறு நடந்தது என்பது குறித்த விழிப்புணர்வு இருப்பது இல்லை என் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

  இந்திய தேசிய ராணுவத்தில் உறுப்பினராக இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட கண்ணையா என்பவரின் மனைவி மாரியம்மாள், மத்திய அரசின் தியாகிகளுக்கான உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்தார்.ஆனால், வாரிசு குறித்த தகவலை கண்ணையா தெரிவிக்கவில்லை எனக் கூறி மாரியம்மாளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

  இதை எதிர்த்து மாரியம்மாள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் போது, இதுபோன்ற காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது எனக் கூறி, மாரியம்மாளின் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து , விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவருக்கு தியாகிகளுக்கான உதவித்தொகையை மத்திய அரசு வழங்கும் என தான் நம்புவதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், அந்த உத்தரவில், 1947ம் ஆண்டுக்குப் பின் பிறந்த பலருக்கு சுதந்திர போராட்டங்கள் எப்படி நடந்தது என்பது குறித்த விழிப்புணர்வு இருப்பது இல்லை என்றும், அவர்கள் சுதந்திரத்தால் கிடைத்துள்ள பலனை அனுபவித்து வருகின்றனர் என்றும் ஒருசிலர் அதனை தவறாக பயன்படுத்துவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: