40 ஆண்டுகளாக தீராத தாகம்... குடிநீர் பஞ்சத்தால் ஊரைக் காலிசெய்யும் மக்கள்...!

குடிநீர் பிரச்னையால் ஒரு ஊரே காலியாவதற்குள் மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Web Desk | news18
Updated: June 14, 2019, 2:00 PM IST
40 ஆண்டுகளாக தீராத தாகம்... குடிநீர் பஞ்சத்தால் ஊரைக் காலிசெய்யும் மக்கள்...!
சிவகங்கையில் தண்ணீர் எடித்து செல்லும் பெண்கள்
Web Desk | news18
Updated: June 14, 2019, 2:00 PM IST
கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் தவிக்கும் மக்கள் ஒருபுறமிருக்க, 40 ஆண்டுகளாக கடும் குடிநீர் பஞ்சத்தால் தவித்து வருகிறது ஒரு கிராமம். இதனால், ஊரே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

40 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமம்

சிவகங்கை- மதுரை சாலையில் சிவகங்கையில் இருந்து 8-ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது நாட்டாகுடி கிராமம். சுமார் 250 பேர் வசித்துவரும் இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குடிநீருக்காக ஏங்கும் உப்புத் தண்ணீர் நிறைந்த கிராமம்

இங்கு நிலத்தடி நீர் அதிக உப்புத்தன்மை கொண்டதாக மாறி பல ஆண்டுகள் ஆன நிலையில், அருகிலுள்ள படமாத்தூர் கிராமத்தில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அந்த கிராமத்தில் இருந்தும் குடிநீர் கிடைப்பது குறைந்து விட்ட நிலையில், ஊற்று தோண்டி கிடைக்கும் நீரை அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அன்றாட தேவைக்கு ஊற்று தோண்டி நீர் எடுக்கும் மக்கள்

3 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று உப்பாற்று கால்வாயில் ஊற்று தோண்டி இந்த கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். மண் சரிந்து ஊற்றுக் கண் மூடிக்கொள்வதால் தினமும் ஒவ்வொரு இடத்தில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
Loading...
தமிழகத்திலேயே கடலோரத்தில் இல்லாத மாவட்டங்களில் உப்புத் தண்ணீர் அதிகளவு கிடைப்பது இங்குதான் என கூறப்படுகிறது. தங்களுக்கு விடிவுகாலம் வராதா என ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களையும், அதிகாரிகளையும் நாடியபோது ஏமாற்றமே மிஞ்சியதாக நாட்டாகுடியை சேர்ந்த ராஜகோபால் கூறுகிறார்.

"தண்ணீர் தட்டுப்பாடால் ஊரை காலி செய்யும் மக்கள்”

உப்பு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் சுத்திரிகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்தும் மின்சார தட்டுப்பாடு காரணமாக அது காட்சிப்பொருளாக உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஏராளமானோர் ஊரை காலிசெய்துவிட்டு சென்றதாக அப்பகுதி முதியவர் ஒருவர் கூறுகிறார்.

குடிநீர் பிரச்னையால் ஒரு ஊரே காலியாவதற்குள் மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Also see... திருவள்ளூரைக் குறிவைக்கும் தண்ணீர் திருட்டு கும்பல்!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.










அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...