கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சென்னையில் 7% கீழ் குறைந்தது..
கோடம்பாக்கத்தில், அதிகபட்சமாக 1,140 பேர் சிகிச்சையில் உள்ளனர். அடுத்தபடியாக அண்ணா நகர் மண்டலத்தில் 993 பேர் சிகிச்சை பெறுகின்றனர். குறைவாக உள்ள மண்டலமாக மணலி உள்ளது. அங்கு 116 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

கோப்புப் படம்
- News18
- Last Updated: September 17, 2020, 12:25 PM IST
சென்னையில் கொரோனா தொற்றால் 1.51 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு, 7 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 1,51,560 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,38,714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இதுவரை 3,013 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 9,833 ஆக, அதாவது 6.48 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தினமும் சராசரியாக 12,000 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது. அன்றாடம் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் 1000-க்கும் குறைவாக உள்ளது. அதேபோல், தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் நான்காக குறைந்துள்ளது.
Also read... Gold Rate | இன்றும் கிடுகிடுவென குறைந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கோடம்பாக்கத்தில், அதிகபட்சமாக 1,140 பேர் சிகிச்சையில் உள்ளனர். அடுத்தபடியாக அண்ணா நகர் மண்டலத்தில் 993 பேர் சிகிச்சை பெறுகின்றனர். குறைவாக உள்ள மண்டலமாக மணலி உள்ளது. அங்கு 116 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 1,51,560 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,38,714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இதுவரை 3,013 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 9,833 ஆக, அதாவது 6.48 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.