ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாலத்தை தாண்டி செல்லும் மழைநீர் : அவசர தேவைக்கு வெளியே செல்லமுடியாமல் தவிக்கும் கிராம மக்கள்

பாலத்தை தாண்டி செல்லும் மழைநீர் : அவசர தேவைக்கு வெளியே செல்லமுடியாமல் தவிக்கும் கிராம மக்கள்

வெள்ளப் பெருக்கு

வெள்ளப் பெருக்கு

முதியவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், மருத்துவ சிகிச்சை பெற செல்லுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆர்.வெங்கடேஷ்வரபுரம் பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள ஓடையில் தரைப்பாலத்தினை தாண்டி தண்ணீர் செல்வதால் ஊரை விட்டு வெளியேற முடியமால் பொது மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவசர தேவைக்கு ஆபத்தான நிலையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் ஆர்.வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்வதற்கு தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாகத் தான் ஊருக்குள் செல்லவோ, வெளியே வரவோ முடியும். இந்த சாலை பகுதியில் உள்ள ஓடையை கடப்பதற்காக ஒரு தரைப்பாலம் உள்ளது.

இந்த தரைப்பாலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து விட்டது. மேலும் மழைக்காலங்களில் இந்த ஓடையில் அதிகளவு நீர் வரத்து செல்லும் காலங்களில் பொது மக்கள் ஊருக்குள் செல்லவோ, வெளியேறவோ முடியாத நிலை உள்ளது. தரைப்பாலத்தில் பதிலாக மேம்பாலம் கட்டிதர வேண்டும் என்று 20 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தற்பொழுது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆர்.வெங்கடேஷ்புரம் கிராமத்தில் உள்ள ஓடையில் மழை நீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தினால் தரைப்பாலத்தினை கடக்க முடியமால் தவித்து வருகின்றனர். சிலர் அவசர தேவைக்காக வேறு வழியில்லமால் தரைப்பாலத்தினை தாண்டி ஓடும் நீரை கடந்து மறு பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது. இரு சக்கர வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் வடிந்த பின்னர் தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த கிராமத்திற்கு வரும் அரசு பேருந்தும், ஓடைக்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த ஒரு சாலையை தவிர இந்த கிராமத்திற்கு செல்ல வேறு வழி இல்லை என்பதால் பொது மக்கள் கடந்த சில தினங்களாக பரிதவித்து வருகின்றனர். ஓடையில் எப்போது தண்ணீர் வருமோ என்ற பயத்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும் முதியவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், மருத்துவ சிகிச்சை பெற செல்லுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருவதால் திடீர், திடீர் என தண்ணீர் அதிகரித்து ஓடுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்சினை நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Must Read : ஊரக உள்ளாட்சித் தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு!

கடந்த 20 ஆண்டுகளாக மழைகாலத்தில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இக்கிராம மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

First published:

Tags: Rain, Rain water