• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெரண்டூர் மலைகிராம மக்களின் துயரம்: சாலை அமைத்தும் பயன்படுத்த முடியவில்லை என குற்றச்சாட்டு

பெரண்டூர் மலைகிராம மக்களின் துயரம்: சாலை அமைத்தும் பயன்படுத்த முடியவில்லை என குற்றச்சாட்டு

மலைப்பாதை

மலைப்பாதை

சாலை உரிய வளைவுகள் இல்லாமல் செங்குத்தாக இருப்பதாக உள்ளது, மழை நீரில் அடித்துவரும் சிறிய கற்கள் சாலைகளில் ஒதுங்குகின்றன.

  • Share this:
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் பெரண்டூர். இந்த சிற்றூருக்கு சாலை போட்டுள்ளனர். பொறியாளரின் மேற்பார்வையில் உரிய முறையில் மாலைப்பாதைக்கான வளைவுகள், பாலங்கள் அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறனர். அந்தப் பாதையில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைக்கிராமம் பெரண்டூர். இத்த மாலை கிராமத்திற்கு மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரசாணை எண் GO No: 109 ADW & TW நாள் 10-11-2021 ன்படி ராசிநகர் அடிவாரத்தில் இருந்து 4.2 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டு, தார் சாலை போடப்பட்டுள்ளது.

அரூர் வனச்சரகம், கல்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த பெரண்டூர் மலை கிராமத்தில், சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. சுமார் 750 பேர் வசிக்கின்றனர். விவசாய வேலை செய்து வரும் அவர்கள், சாலை வசதி பெற்றபோதும், அது முறையாக அமைக்கப்படாததால், அந்த பாதையை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த சாலை முறையான பொறியாளரைக் கெண்டு திட்டமிட்டதாகத் தெரியவில்லை என்று குற்றம் சாட்டும் கிராம மக்கள், சாகசத்திற்கு அமைக்கப்படும் சாலைபோல இருப்பதாக கூறுகின்றனர்.

மழைநீர் செல்வதற்கு உரிய வழிவகை இல்லாததால், மழை நீரில் அடித்துவரும் சிறிய கற்கள் சாலைகளில் ஒதுங்குகின்றன. இதனால் இரு சக்கர வானத்தில் செல்பவர்கள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டு விபத்து நேரிடுகிறது. பெரிய வாகனங்களையும் அதில் ஓட்டிச் செல்ல முடியவில்லை. அத்துடன் தார் சாலை ஆங்காங்கே மலை நீரால் சேதமாகின்றது.

சாலை உரிய வளைவுகள் இல்லாமல் செங்குத்தாக இருப்பதாகவும், வளைவுகள் உரிய இடைவெளியுடன் இல்லை என்றும், மலைப்பாதை பாலங்கள் முறையாக அமைக்கப்படவில்லை எனவும் மலைகிராம மக்கள் கவலை தெரிகிக்கின்றன. இதனால், சுமையேற்றும் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மலை நீரால் சாலைக்கு வந்த கற்கள்


Must Read : திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் யானை காப்பகங்கள் - அமைச்சர் அறிவிப்பு

மேலும், இரு சக்கர வானத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் அடைந்து மலைவாழ் மக்களின் வாழ்க்கையை துயரத்தில் மூழ்கடிக்கும் முன்பு, அரசு உரிய முறையில் ஆய்வு செய்து, சாலையில் உரிய வளைவுகளை ஏற்படுத்தி பயன்மிகு சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைப்பாதை


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: