• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மின்கம்பம் நட ரூ.2 லட்சம் கேட்கும் மின் வாரியம்... 9 ஆண்டுகளாக இருளில் தவிக்கும் கிராமம்...!

மின்கம்பம் நட ரூ.2 லட்சம் கேட்கும் மின் வாரியம்... 9 ஆண்டுகளாக இருளில் தவிக்கும் கிராமம்...!

இலவச வீட்டு மனை பட்டா வழங்கபட்ட 60 பேரில் பலருக்கு தொகுப்பு வீடு கட்ட பணி ஆணை கிடைத்தும் மின் இணைப்பு இல்லாததால் வீடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். 

  • News18
  • Last Updated :
  • Share this:
சீர்காழி அருகே உள்ள கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். 2 லட்சம் ரூபாய் பணம் செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என்று மின் வாரியம் கூறியதால் அந்த கிராமமே இருளில் மூழ்கியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் கிராமம் கணேசன் நகரில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த வீடு இல்லாத குடும்பத்தினர் 60 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கபட்டது. அந்த இடத்தில் 6 குடும்பத்தினர் வீடுகட்டி குடியேறினர். ஏழை விவசாய கூலி தொழிலார்களான இவர்கள் சுற்று சுவர் கூட இல்லாமல் கூரை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் கடந்த 9 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கபடாமலும். சாலை மற்றும் குடிநீர் வசதி இல்லாமலும் இருளிலேயே வாழ்ந்து வருகின்றனர். பல முறை மின் இணைப்பு கேட்டும் இதுவரை வழங்கபடவில்லை.

5 மின்கம்பங்கள் புதிதாக அமைத்து மின் இணைப்பு வழங்க 2 லட்சம் ரூபாய் பணம் கட்டினால்தான் மின்சாரம் வழங்க முடியும் என்று மின்வாரியம் கூறியுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் இங்குள்ள பள்ளி மாணவர்கள் மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில்தான் படித்து வருகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா வழங்கபட்ட 60 பேரில் பலருக்கு தொகுப்பு வீடு கட்ட பணி ஆணை கிடைத்தும் மின் இணைப்பு இல்லாததால் வீடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் படிக்கும் மாணவர்கள்


விவசாய கூலி தொழிலாளர்களான தங்களால் 2 லட்சம் பணம் கட்ட முடியாது என வேதனையுடன் கணேசன் நகர் மக்கள் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு மின் இணைப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளர்.

Also see... ’ஊருக்குள் மதப் பிரச்சாரங்களுக்கு அனுமதியில்லை’- நெல்லை கிராமத்தில் அறிவிப்பு பலகை

Also see.... மதுவின் வாசம் படாமல் வாழும் காக்காயன்பட்டி கிராமம்!


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: