• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா நிவாரண பொருள்: பால் பவுடரை சாப்பிட்ட 7 பேருக்கு வாந்தி மயக்கம்!

கஜா நிவாரண பொருள்: பால் பவுடரை சாப்பிட்ட 7 பேருக்கு வாந்தி மயக்கம்!

மருத்துவர்கள் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மருத்துவர்கள் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

பால் பவுடரை சாப்பிட்ட, 9 மாத குழந்தை சுகந்தன், 6 வயது சிறுமி கோபிகா, 14 வயது சிறுவன் கவியரசன் உள்ளிட்ட இரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுக்கோட்டை அருகே அரசு சார்பில் வழங்கப்பட்ட கஜா நிவாரண பொருட்களில் இருந்த ஆவின் பால் பவுடரை உட்கொண்ட இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

கறம்பக்குடி அருகே உள்ள பட்டத்திக்காடு, மஞ்சுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

மஞ்சுக்காட்டில் உள்ளவர்கள் அரசு வழங்கிய நிவாரணப் பெட்டகத்திலிருந்த ஆவின் பால் பவுடரை நேற்று உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. பால் பவுடரை சாப்பிட்ட, 9 மாத குழந்தை சுகந்தன், 6 வயது சிறுமி கோபிகா, 14 வயது சிறுவன் கவியரசன் உள்ளிட்ட இரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் முதலுதவி மட்டும் செய்யப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையடுத்து கறம்பக்குடி மருத்துவமனையை மூடிய பொதுமக்கள் மருத்துவமனை முன்பு அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: