Home /News /tamil-nadu /

திண்டுக்கல்: குடிநீர் விநியோகம் இல்லாததால் தவிக்கும் மக்கள்

திண்டுக்கல்: குடிநீர் விநியோகம் இல்லாததால் தவிக்கும் மக்கள்

  • News18
  • Last Updated :
    திண்டுக்கல் நகர் முதல் நத்தம் வரையிலான பகுதிகளுக்கு, குடிநீர் விநியோகம் இல்லாததால் இரவு நேரங்களில் செல்போன் வெளிச்சத்தில் ஆபத்தான சூழலில் மக்கள் குடிநீர் பிடித்துச் செல்லும் அவல நிலை நிலவுகிறது. 

    இரவு நேரங்களில் நிம்மதியாகத் துாங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் இவர்களோ, குடிநீருக்காக தங்கள் துாக்கத்தையும் தொலைத்து விட்டு தவிக்கின்றனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேநேரம் திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதிகளுக்கு இடைப்பட்ட குள்ளனம்பட்டி, ரெட்டியபட்டி, ஆர்.எம்.எஸ் காலனி, கொசவபட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அதனால் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான குழாயில் இருந்து ஒழுகும் குடிநீரை இந்த கிராமத்து மக்கள் பிடித்து தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    மேலும் இரவு நேரங்களில் மட்டுமே குழாயில் நீர் செல்லும் என்பதால், மக்கள் இரவு நேரங்களில், தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு, செல்போன் வெளிச்சத்தில் குடிநீர் பிடித்து வருகின்றனர். அவர்களுடன் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், மாணவ, மாணவியரும் குடிநீர் பிடிப்பதற்காக  தவிக்க வேண்டியுள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை, பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலவும் இரவு நேரங்களில் சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dindigal, Drinking water, Natham, No Supply

    அடுத்த செய்தி