மது நோயாளிகள் அதிமுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது எனவும் மதுவினால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் இறக்கிறார் எனவும் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் நினைவு தினமான ஜுலை 31ம் தேதியன்று, தமிழ்நாடு மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜன், ஆலோசகர் கிறிஸ்டினா சாமி, செல்லபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக, ‘மதுவில்லா தமிழகமே மகிழ்ச்சியான தமிழகம்’ என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.
இந்த ஆய்வறிக்கையில், கடந்த 2019ம் ஆண்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான ஆண்டு. எய்ம்ஸ் நடத்திய ஆய்வில், இந்தியாவில் சுமார் 5.7 கோடி பேர் மதுவிற்கு அடிமையாக உள்ளனர் என தெரியவந்துள்ளது.
Also read: அண்ணாமலையை சீண்டிய தயாநிதி மாறன்.. ட்விட்டரில் தந்த பதிலடி..
உலக சுகாதார அமைப்பின் மற்றொரு ஆய்வின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 2.60 லட்சம் பேர் மதுவினால் இறக்கிறார்கள் என்கிறது.
குடும்ப நல கணக்கெடுப்பு குழு ஆய்வில், மது குடிப்போர் அதிகமுள்ள மாநிலங்களில் திரிபுரா, அந்தமான், சிக்கிம் மாநிலங்களையடுத்து தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது. மது நோயாளிகள் அதிமுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மதுவினால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் இறக்கிறார். மது குடிப்பதால் 200 வகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
மதுவினால் வரும் நோய்கள், கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக கல்லீரல் பாதிப்பிற்கு 80 % க்கு மேல் மதுவே காரணமாக உள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில், நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள 53 நகரங்களில் சென்னையில்தான் அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன. இந்திய அளவிலான ஒட்டு மொத்த சாலை விபத்து உயிரிழப்பில் 10% மேல் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 72% விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடைபெறுகிறது என்று தெரியவந்துள்ளது.
Also read: புரோட்டா சாப்பிடுவதற்காக தினமும் ஹோட்டலுக்கு வரும் காளை மாடு!
தமிழ்நாட்டில் தினமும் மது குடிக்கும் 70 லட்சம் பேர் உட்பட மொத்தம் 1.32 கோடி பேர் மது குடிக்கிறார்கள். குறிப்பாக 11 வயது முதல் 70 வயதினர் வரை மது குடிக்கிறார்கள். இதில், 20 வயதிற்கு உட்பட்டோர் 32.1%, பெண்கள் 8.6 % மது அருந்துகிறார்கள். மது அருந்துவோரின் சராசரி வயது 20லிருந்து 14ஆக குறைந்துள்ளது என்று அண்மைக்கால ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
மது குடிப்பதால் குடும்ப வன்முறை, பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. மது குடிப்பவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மது குடிப்பதால் 34% வேலையிழப்பு ஏற்படுகிறது.குறிப்பாக, மதுக்கடைகள் மூலம் சுமார் ₹ 25, 000 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், மதுவிற்கான செலவு, பொருளாதார இழப்பு, மருத்துவ செலவு என சுமார் ₹ 67, 444 கோடி மக்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.
Also read: பலே கில்லாடி.. மனைவிக்கு தெரியாமல் பெற்றோர் உதவியுடன் இரண்டு திருமணம் செய்த நபர்!
மதுக்கடைகள் அருகில் இருப்பதாலும் குடிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மகசூல் ட்ரஸ்ட் ஆய்வின்படி, மதுக்கடை இருக்கும் பகுதியின் 1 கி.மீ சுற்றளவில் 70% பேருக்கு மதுப் பழக்கம் இருக்கிறது என்கிறது.
உடல் நலம் கெட்டு, வேலை, பொருளாதாரம் இழந்து, கலாச்சார சீர்கேட்டிற்கும் மது காரணமாகிறது. குடிநோயால் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மதுப்பழக்கத்தை கைவிட நினைப்போரும் சிகிச்சையை நாடுவோரும் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ, உளவியல் சிகிச்சை தேவை. குடிநோயாளிகள் மதுவை நிறுத்துவதால் கை. கால் நடுக்கம் உள்ளிட்டவை 4, 5 நாட்கள் மட்டுமே இருக்கும். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
அதே நேரத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு காலம் மது நோயாளிகளின் மாற்றத்திற்கான காலமாக இருந்தது. வீட்டில் வறுமை இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், மீண்டும் மதுக்கடைகளைத் திறந்ததால், மீண்டும் பாதிப்புகள் தொடர்வதாக பெண்கள் தெரிவித்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் தமிழ்நாடு மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தீர்வுகளையும் இந்த அறிக்கையில் முன் வைத்துள்ளனர். இதன்படி, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் மதுவின் தீமைகள் குறித்த பாடங்களை கட்டாயமாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மதுவின் பாதிப்புகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த ஆணையம் ஓராண்டிற்கும் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து, தீர்வு காண வேண்டும்.மதுக்கடைகள் திறப்பை கொள்கை முடிவு என்று தட்டிக்கழிக்காமல், வருவாயைப் பெருக்க மாற்று வழிகளைத் தேட வேண்டும். ஏனெனில், மதுவினால் வரும் வருமானத்தை விட, இழப்புகளே அதிகம். இதைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வறிக்கையை முதலமைச்சருக்கும் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alcohol, Alcohol consumption, Liquor rehabilitation centre, Tasmac