Home /News /tamil-nadu /

ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல்.. மக்கள் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும் - ராமதாஸ்

ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல்.. மக்கள் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும் - ராமதாஸ்

ராமதாஸ்

ராமதாஸ்

ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக்கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன் ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான மக்களின் ஆர்வம் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வாரத்திற்கு வாரம் குறைந்து வருவது ஆரோக்கியமான அடையாளம் அல்ல.

    ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் ஐயங்களும், அச்சங்களும் இருந்தால் அதை அரசு போக்க வேண்டும்.

    Also Read: தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் கிடையாது.. பொது இடங்களுக்கு செல்லவும் தடை

    பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று, அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Omicron, PMK, Ramadoss

    அடுத்த செய்தி