முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு - பயிற்சி செவிலியர்கள் மீது குற்றச்சாட்டு!

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு - பயிற்சி செவிலியர்கள் மீது குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் கூலி தொழிலாளி. இவரது கர்பிணி மணைவி பிரனீபாவுக்கு தலைபிரசவம் என்பதால் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவனைக்கு 9ம்தேதி அழைத்து வந்துள்ளார்.

  • Last Updated :

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் கூலி தொழிலாளி. இவரது கர்பிணி மணைவி பிரனீபாவுக்கு தலைபிரசவம் என்பதால் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவனைக்கு 9ம்தேதி அழைத்து வந்துள்ளார்.

குழந்தை நல்ல நிலையில் உள்ளதாகவும்  இருதினங்களுக்குள் சுகபிரசவம் ஆகும் என்று கூறி மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். 10ம் தேதி மாலைவரை நன்றாக இருந்தவருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கு இருந்த செவிலியர்கள் பாராசிட்டமல் மாத்திரை சாப்பிடும்படி கூறியதாகவும், பணியில் இருந்த மருத்துவர் நந்தினி பரிசோதனை செய்துவிட்டு பிரஷர் அதிகமாக உள்ளதாகவும் குழந்தை திரும்பியுள்ளதால் உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டும் இல்லையெனில் தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அறுவைசிகிச்சை செய்துள்ளார்.

ஆனால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தை இறப்பிற்கு பயிற்சி செவிலியர்களின் அலட்சியமே காரணம் என்றும் பிரனீபாவுக்கு பிரஷர் உள்ளது ஏன் சோதனை செய்யவில்லை என்று பயிற்சி செவிலியர்களை மருத்துவர் திட்டியதாகவும் குற்றம்சாட்டிய உறவினர்கள் குழந்தை இறப்பிற்கு மருத்துவமனையே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இறந்த குழந்தையை தூக்கிகொண்டு மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் உறவினர்கள் மற்றம் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நீடித்தது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி, தலைமை மருத்துவர் ராஜசேகர் டிஎஸ்பிக்கள் வசந்தராஜ், லாமேக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Also read... கடலூரில் தொழிற்சாலையில் திருட வந்த கும்பல் - போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீச முயற்சி

முடிவில் நாகையிலிருந்து மருத்துவகுழுவினர் மூலம் மருத்துவசிகிச்சை குறித்து விசாரணை செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

top videos

    -செய்தியாளர்: கிருஷ்ணகுமார்.

    First published:

    Tags: Mayiladuthurai