”ராத்திரியில தூங்கி பல நாளாச்சி” தண்ணீர் லாரிக்காக விடிய விடிய காத்திருக்கும் சென்னை பெண்கள்!

மாதிரிப்படம்

தண்ணீர் சப்ளை குறைந்துவிட்டதால், தங்களது வருமானமும் குறைந்துவிட்டதாக, லாரி ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தண்ணீர் பஞ்சத்தால், சென்னையில் நள்ளிரவில் காலிக்குடங்களுடன், தண்ணீர் லாரிகளை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கின்றனர். தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.

தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

பருவமழை பொய்த்துப் போனதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகள், வறண்டு போய்விட்டன. நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டதால், தலைநகர் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் ஆங்காங்கே குடிநீருக்காகவும் அத்தியாவசிய தேவைக்கான நீருக்காகவும் காலிக்குடங்களுடன் இரவு பகல் பாராமல் அலைந்து திரிகின்றனர்.

கேன் தண்ணீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு வாங்க முடியுமா?

அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேனை விலைகொடுத்து வாங்கினாலும், அத்தியாவசிய தேவைக்கும் கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்த முடியுமா  என கேள்வி எழுப்புகின்றனர். தண்ணீர் பிரச்சனையால் தங்களால் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், அலுவலகத்திற்கு சீக்கிரம் செல்ல முடியவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.

கேன் தண்ணீர்


மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்த வேண்டும் என கருத்து

மழை இல்லாவிட்டாலும், "Save water" என்ற பிரச்சாரத்தை முன்வைத்து, இன்னும் தீவிரமாக விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறும் பொதுமக்கள் சிலர்,  மழைநீர் சேகரிப்பை அனைத்து வீடுகளிலும் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அத்துடன் போதுமான அளவிற்கு மரங்களை நட வேண்டும் என்றும், தேவையில்லாமல் நீர் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள்


நீர் இல்லாததால் வருமானம் பாதியாகிவிட்டது: லாரி ஓட்டுநர்கள்

பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் அதே நேரத்தில், லாரி ஓட்டுநர்களும் இரவு பகல் பாராமல் தண்ணீர் விநியோகத்தில் ஈடுபடுகின்றனர். முன்பெல்லாம் நாளொன்றுக்கு 10 நடை தண்ணீர் சப்ளை செய்த நிலையில், தற்போது பாதியாக குறைந்துவிட்டதாக லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்


அரசு உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்

தண்ணீர் சப்ளை குறைந்துவிட்டதால், தங்களது வருமானமும் குறைந்துவிட்டதாக, லாரி ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நீர் இல்லாவிட்டால், அனைத்து தரப்பினரும் முடங்கிவிடுவார்கள், அனைத்து தொழில்களும் முடங்கி விடும். இதையேதான் நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் கூறியுள்ளார். எனவே அரசு உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்ற அதே நேரத்தில், பொதுமக்களும் நீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also see... தண்ணீர் மோசடியை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை பதற வைக்கும் பின்னணி


Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: