• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாலைப் பள்ளியாக மாறியது மக்கள் பள்ளித் திட்டம்!

மாலைப் பள்ளியாக மாறியது மக்கள் பள்ளித் திட்டம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனாவால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக வீட்டின் அருகில் கற்பிக்கும் திட்டத்திற்கு மக்கள் பள்ளி என்ற பெயரை ‘மாலைப் பள்ளி’ என தமிழக அரசு மாற்றியுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

    கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைப்பாடுகளை தீர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மாலைப் பள்ளி என்கிறத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    Must Read : 21 நாட்களாக போக்குகாட்டிய T23 புலி மசினகுடியில் பிடிபட்டது!

    விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி ,கடலூர் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுகல் ஆகிய 8 மாவட்டங்களில் ஆரம்பக் கட்டமாக முதலில் செயல்படுத்தப்பட உள்ளது. அக்டோபர் 18ஆம் தேதி இந்த திட்டத்திற்கான ப தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: