ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்பிய மக்கள்.. பெருங்களத்தூரில் கடும் நெரிசல்.. 2 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்பிய மக்கள்.. பெருங்களத்தூரில் கடும் நெரிசல்.. 2 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

Pongal Festival Heavy traffic | தமிழ்நாடு முழுவதும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்டு வரும் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்து சென்னை கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார். சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகளிடம் நேரடியாக சென்று பேருந்துகளின் இயக்கம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த இரண்டு நாட்களில் 5,134 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 66 ஆயிரத்து 462 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக கூறினார். பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் என்ற புகார் இதுவரை எதுவும் எழவில்லை என்றும் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியை கடந்து சென்றதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசாருடன் சட்டம் ஒழுங்கு போலீசாரும் இணைந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பேருந்து திடீரென பஞ்சர் ஆனது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

' isDesktop="true" id="872285" youtubeid="2bM657s14mo" category="tamil-nadu">

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் பேருந்து நிலையம், சோனா மீனா திரையரங்க பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போதுமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டினர். கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு செல்லும் பயணிகள் முண்டியடித்து ஏறுவதையும், கூட்ட நெரிசலையும் தவிர்க்க போலீசார், பயணிகளை வரிசையாக நிறுத்தி பேருந்தில் ஏற வைத்தனர். பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறினர். காவல்துறையின் இந்த நடவடிக்கையால் தள்ளுமுள்ளு இல்லாமல் ஊருக்கு செல்ல முடிவதாக பயணிகள் தெரிவித்தனர்.

பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையங்களில் குவிந்தனர். இதனால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதோடு, அவிநாசி சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

First published:

Tags: Chennai Traffic, Pongal festival