சேலம் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சேலம் - அரூர் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட ஆச்சாகுட்டப்பட்டி, அடிமலைப்புதூர், சத்திரப்பட்டி, செங்காடு, உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு முறையான குடிநீர் கடந்த ஒரு மாதமாக வழங்கவில்லை எனக் கூறி ஆச்சாகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் சேலம் அரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மக்களிடம் சமாதானம் பேசும் அதிகாரிகள்
இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் படுத்தினர். ஆனால் அதிகாரிகள் வரும் வரை நாங்கள் செல்ல மாட்டோம் என கிராம மக்கள் கூறி சாலையின் அருகிலேயே நின்றனர்.
பின்பு அங்கு வந்த சேலம் தாசில்தார் மாதேஸ்வரன் கிராம மக்களிடம் முறையான குடிநீர் வழங்குவதாக உத்தரவாதம் அளித்த பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், ஆச்சா குட்டப்பட்டி பகுதியில் 4 கிராமங்கள் உள்ளன. இங்கு கடந்த ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை.

குடி தண்ணீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் போராடும் மக்கள்
மேலும் வாரம் ஒருமுறை உப்புத்தண்ணீரும் மாதம் ஒருமுறை நல்ல தண்ணீரும் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் தற்பொழுது முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இதனால் எங்களுடைய அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது சமையல் செய்வதற்கும் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் குடிநீர் இல்லாமல் சிரமப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

கண்ணீருடன் தண்ணீருக்காக காத்திருக்கும் பெண்
மேலும் குடிநீர் முறையாக வழங்கப்படாததால் நாங்கள் குடிநீருக்காக காத்திருப்பதால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வேதனையுடன் தெரிவித்தனர் இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
Also see... சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Also see... தண்ணீர் பஞ்சத்தின் மற்றொரு கோர முகம்... தண்ணீர் கேட்டதால் தாக்கப்பட்ட பெண்...!
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.