Home /News /tamil-nadu /

தண்ணீர் பிரச்னை: திருப்பூரில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

தண்ணீர் பிரச்னை: திருப்பூரில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

Tiruppur District : திருப்பூரில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் கடந்த 1ம் தேதி முதல் குடிநீர் விநியோகம் செய்யாமல் பொதுமக்களை புறக்கணிப்பதாகவும், 22 தினங்களில் எல்.அன்ட்.டி நிர்வாகம் 10.30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் 22 நாட்கள் கடந்து 50,000 லிட்டர் தண்ணீர் மட்டும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மங்கலம் ஊராட்சி தலைவர் மூர்த்தி (திமுக) தலைமையில் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருப்பூர் மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையும் படியுங்கள் : சாலையில் வீணாகச் செல்லும் குடிநீரில் துணி துவைத்து, குளித்து விட்டுச் சென்ற நபர் ... அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

    விரைந்து சென்ற போலீசார் எல்.அன்ட்.டி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தினங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tiruppur

    அடுத்த செய்தி