• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காஞ்சிபுரத்தில் மூலவர் சந்நிதியை திறக்க கோரி போராட்டம்: போலீசாருடன் தள்ளு முள்ளு!

காஞ்சிபுரத்தில் மூலவர் சந்நிதியை திறக்க கோரி போராட்டம்: போலீசாருடன் தள்ளு முள்ளு!

போலீசாருக்கும் பக்தர்களுக்கும் தள்ளு ,முள்ளு

போலீசாருக்கும் பக்தர்களுக்கும் தள்ளு ,முள்ளு

வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் வழியாக வந்து அத்தி வரதரை தரிசித்து விட்டு கோவிலின் உள்ளே மூலவர் மற்றும் தாயார் சன்னதியில்  தரிசினம் செய்ய சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் தாயார் சந்நிதிகளை தரிசனத்திற்காக திறந்து வைக்க கோரி பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்களுக்கு நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

அத்திவரதர் வைபவத்தில்  நாள்தோறும் தமிழகம், ஆந்திரா தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்பட நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டத்தினால் நெரிசல் அதிகமாகி சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே சென்ற 5 பக்தர்கள்  மூச்சு திணறல் ஏற்பட்டு  பரிதாபமாக உயிரிழந்தனர்.

வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் வழியாக வந்து அத்தி வரதரை தரிசித்து விட்டு கோவிலின் உள்ளே மூலவர் மற்றும் தாயார் சந்நிதியில்  தரிசினம் செய்ய சென்று வந்தனர். ஆனால் கடந்த ஒருவாரமாக  கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டதாலும் மேலும் உயிரிழப்புகள்  ஏற்படாமல் இருக்கவும் சந்நிதி மூடப்பட்டது.

அதனால்  அத்தி வரதர் வைபவம் முடியும் வரை கோவிலின் உள்ளேயே மூலவர் மற்றும் தாயார் சந்நிதிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் மூலவருக்கு பூஜை செய்யும் ஐயர்களும் பக்தர்களும் மூலவர் மற்றும் தாயார் சன்னதிக்கு செல்ல முடியாததை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து  செல்ல மறுத்ததால்  பணியில் இருந்த போலீசாருக்கும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் படிக்க... அத்திவரதரை தரிசிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: