முகப்பு /செய்தி /தமிழ்நாடு / US election Results 2020 | கமலா ஹாரிஸ் வெற்றிக்காக வீடுகளில் சிறப்பு பூஜை செய்யும் அவரது பூர்விக கிராமமக்கள்..

US election Results 2020 | கமலா ஹாரிஸ் வெற்றிக்காக வீடுகளில் சிறப்பு பூஜை செய்யும் அவரது பூர்விக கிராமமக்கள்..

கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் நடக்கும் சிறப்பு பூஜை

கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் நடக்கும் சிறப்பு பூஜை

அமெரிக்க தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் அவரது பூர்விக கிராமத்தில் வீடுகளில் மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெறவும் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிட வேண்டி அவரது உருவப் படத்தை வைத்து பூர்விக கிராமத்தில் வீடுகளில் மக்கள் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றை பின்னுக்குத்தள்ளி அமெரிக்க தேர்தல் உலக மக்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இம் மாதம் மூன்றாம் தேதி நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மூன்றாவது நாளான இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரிஷின் முன்னோர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இதனை அறிந்த கிராம மக்கள் அவரது குலதெய்வ கோவிலான ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் அன்னதானமும் செய்து வருகின்றனர்.

நேற்றைய தினம் கமலா ஹரிஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதவிதமாக கிராம மக்கள் அவர்களின் வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு அதன் மூலம் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்தனர்.

அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்தி வீட்டு வாசலில் கோலமிட்டு அசத்திய கிராம மக்கள்
அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்தி வீட்டு வாசலில் கோலமிட்டு அசத்திய கிராம மக்கள்

இந்நிலையில் இன்றைய தினம் துளசேந்திரபுரம் கிராம மக்கள் அவர்களின் வீடுகளில் கமலா ஹரிஷின் உருவப் படத்தை வைத்து பூஜை அறைகளில் சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் வழிபாடு நடத்தினர்.

First published:

Tags: Kamala Harris, US Election 2020