எஸ்.பி.பி உடலுக்கு கூட்டம் கூட்டமாக அஞ்சலி செலுத்தும் திரையுலகினரும், பொதுமக்களும்...

உடல் நலக்குறைவால் காலமான பாடகர் எஸ்.பி.பி உடலுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 9:16 AM IST
  • Share this:
சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இயக்குநர் பாரதிராஜா, அங்கு வருகை தந்தார். மருத்துவர்களிடம் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

பாரதிராஜாவின் இந்த பேட்டியின்போதே பலரும் எஸ்.பி.பி நிலை குறித்து யூகித்துவிட்ட நிலையில், அதே நேரத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நுங்கம்பாக்கம் இல்லத்திலும் ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. இந்நிலையில், பிற்பகல் சுமார் ஒன்றரை மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.பி.சரண், ஒரு மணியளவில் எஸ்.பி.பி காலமாகிவிட்டதாக அறிவித்தார்.

இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு நின்றுவிட்டதால், எஸ்.பி.பி. காலமானதாக எம்.ஜி. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டிருந்தது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளித்தாலும், அது பலனளிக்கவில்லை என்றும், எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள இல்லத்திற்கு எஸ்.பி.பி. உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

மேலும் படிக்க...எஸ்பிபி உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading