ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒமைக்ரானுக்கு மத்தியில் தமிழக சுகதாரத் துறையினருக்கு புதிய சவால்

ஒமைக்ரானுக்கு மத்தியில் தமிழக சுகதாரத் துறையினருக்கு புதிய சவால்

கடந்த இரண்டு அலைகளிலும் கொரோனாவின் தீவிர தாக்கத்துக்கு அதிகம் ஆளாகியிருப்பது முதியவர்கள் தான்.

கடந்த இரண்டு அலைகளிலும் கொரோனாவின் தீவிர தாக்கத்துக்கு அதிகம் ஆளாகியிருப்பது முதியவர்கள் தான்.

கடந்த இரண்டு அலைகளிலும் கொரோனாவின் தீவிர தாக்கத்துக்கு அதிகம் ஆளாகியிருப்பது முதியவர்கள் தான்.

 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியிருக்கும் வேளையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம் காட்டி வருவது சுகாதாரத்துறையினருக்கு சவாலாக அமைந்துள்ளது.

  கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்களப்பணியாளர்களுக்கு அடுத்த படியாக முதியவர்களுக்கே நாடு முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் முன்னுரிமை வழங்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணி தொடங்கி பத்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் சராசரியாக 84.42% பேர் முதல் டோஸும், 55.01% பேர் இரண்டாவது டோஸும் செலுத்தியுள்ளனர். இதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் மாநில சராசரியை விட குறைவாகவே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

  மாநிலத்தில் ஒரு கோடியே 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதில், 43 லட்சத்து 56 ஆயிரத்து 126 பேர் அதாவது 42% பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி முழு பாதுகாப்பை எட்டியுள்ளனர். கடந்த இரண்டு அலைகளிலும் கொரோனாவின் தீவிர தாக்கத்துக்கு அதிகம் ஆளாகியிருப்பது முதியவர்கள் தான். கடந்த ஆகஸ்ட் மாதம் வரை தமிழகத்தில் 34 ஆயிரத்து 878 பேர் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். இதில் 58% இறப்புகள் அதாவது 20 ஆயிரத்து 67 இறப்புகள், 60 வயதுக்கு மேற்பட்ட வயது பிரிவில் நிகழ்ந்தன.

  Also read : ஓமைக்ரான் பரவல்: தமிழகம் வருகிறது மத்திய குழு

  ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என பொது சுகாதார இயக்குநர் செல்வ விநாயகம் வலியுறுத்தியுள்ளார். முதியவர்கள் வெளியில் செல்லாததால் அவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என்ற தவறான எண்ணத்தை தவிர்க்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே தற்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் கையில் இருக்கும் ஆயுதம் என்பதால் அதை தாமதிக்காமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

  Also read : கோவையில் பாலியல் புகாருக்கு உள்ளான அரசு பள்ளி ஆசிரியர் கைது!

  First published: