ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்... குளுகுளு குன்னூர் பகுதி மக்களையும் வாட்டும் தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர் பிடிக்கும் ஊட்டி குன்னுர் மக்கள்

உதகையில் இருந்து 3-வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்துதல், தடுப்பணைகளை கட்டுவது, மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவற்றின் மூலமே தண்ணீர் பஞ்சம் தீரும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதி மக்களும் கூட தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய், 15 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கடும் தண்ணீர் பஞ்சத்தில் குன்னூர் பகுதி மக்கள்

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டதைப் போன்றே குன்னூர் பகுதி மக்களும் கடும் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரு குடம் தண்ணீரை ரூ.15 வரை கொடுத்து வாங்கும் நிலை

தண்ணீரை முறையாக விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக, ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய், 15 ரூபாய் என காசு கொடுத்து வாங்க வேண்டிய அவலம் இருப்பதாக அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் பிடிக்கும் மக்கள்


சாலை வசதி இல்லாத காரணத்தால் தண்ணீர் கொண்டு வர வாகனங்கள் வருவதில்லை

பலர் ஒன்றிணைந்து 500 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி தங்களது வீடுகளுக்கு 5 முதல் 6 குடங்களாக பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். ஒரு சில பகுதிகளில் சாலை வசதி இல்லாத காரணத்தால் பணம் கொடுக்க தயாராக இருந்தாலும் தண்ணீர் கொண்டு வர வாகனங்கள் வருவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு வரி செலுத்திவிட்டு, பணம் கொடுத்து தண்ணீரை  வாங்க வேண்டுமா என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.

குடத்தில் தண்ணீர் கொண்டு போகும் பெண்


ஊற்றுநீரை சேமித்து முறையாக விநியோகிக்க வலியுறுத்தல்

மலைப்பகுதிகளில் வெளியேறும் ஊற்று நீரை சேகரித்து, பொதுமக்களுக்கு விநியோகித்தாலே பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்பது குன்னூர் பகுதிவாசிகளின் கருத்தாக உள்ளது.

தள்ளு வண்டியில் தண்ணீர் குடங்களை எடுத்து வைக்கும் சிறுவன்


3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமல்படுத்த வேண்டுகோள்

உதகையில் இருந்து 3-வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்துதல், தடுப்பணைகளை கட்டுவது, மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவற்றின் மூலமே தண்ணீர் பஞ்சம் தீரும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

Also see... தண்ணீர் தட்டுப்பாட்டால் முடங்கிய கட்டுமானப் பணிகள்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: