Home /News /tamil-nadu /

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை - மா.சுப்பிரமணியம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை - மா.சுப்பிரமணியம்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

Booster Dose : இது வரை 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்தது.

18-59 வயது பிரிவினருக்கான இலவச பூஸ்டர் டோஸ் அரசு மருத்துவமனைகளில் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இந்த முகாம் எழும்பூர் குடும்ப நலத்துறை பயிற்சி மையத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் முன்னிலையில் தொடங்கியது.

அப்போது பேசியவர்,” இதில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகின்றன. 4.6கோடி பேருக்கு மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 97% பேர் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 87.35% பேர் இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

செப்டம்பர் 30ம் தேதிக்குள் 30 லட்சம் தடுப்பு மருந்துகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன. எனவே அதை மக்களுக்கு பயன்படுத்த இலவச பூஸ்டர் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியது தமிழக அரசு. கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் கொரோனா மரணங்கள் ஏற்படவில்லை. மெகா தடுப்பூசி முகாம் இனி மாதத்துக்கு இரண்டு முறை நடத்தப்படும்.



வருகிற 24ஆம் தேதி 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும். 38 மாவட்டங்களில் 2590 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. முதல்வர் இன்றோ நாளையோ வீடு திரும்புவார். முதல்வர் நலமாக உள்ளார்” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசியவர், “ இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கியுள்ளன. பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படுவது இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின், நோய் எதிர்ப்பு சக்தி மங்கி போகாமல் உடலில் தக்க வைத்துக் கொள்ள செலுத்திக் கொள்வதாகும். கொரொனா இரண்டாவது தவணை செலுத்தி ஆறு மாத காலத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒன்பது மாத காலமாக இருந்த இடைவெளி கடந்த வாரம் ஆறு மாத காலமாக குறைக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு தவணைகள் என்ன தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே தடுப்பூசியை தான் பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி மாற்றி செலுத்திக் கொள்வது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் அவ்வாறு செலுத்திக் கொள்வது அனுமதிக்கப்படவில்லை. இன்று (ஜூலை 15) முதல் பூஸ்டர் டோஸ் அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இது வரை 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்தது. 18-59 வயது பிரிவினர் ரூ. 386.25 க்கு தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது இவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளிலேயே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது டோஸ் செலுத்தி ஆறு மாத காலமாகி 3,60,60,204 பேர் உள்ளனர். இவர்களில் 18,08,669 பேர் பூஸ்டர் செலுத்தியுள்ளனர்.

Also see...வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் புதிய ட்வீட்.!

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, CoronaVirus

அடுத்த செய்தி