முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'இன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்படும்' - மொபைல் எண்களுக்கு வரும் போலியான தகவல் - மின்சாரத்துறை எச்சரிக்கை!

'இன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்படும்' - மொபைல் எண்களுக்கு வரும் போலியான தகவல் - மின்சாரத்துறை எச்சரிக்கை!

மின் பகிர்மான கழகம் அறிவிப்பு

மின் பகிர்மான கழகம் அறிவிப்பு

மின் கட்டணம் ஊழியர் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப்பில் மூலமாகவோ அணுகினால் அதை நம்ப வேண்டாம் எனவும் மின் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாடிக்கையாளர்கள் தங்களது கடந்த மாத மின் துறை கட்டணத்தை கட்ட தவறினால், இன்று இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என போலியான செய்தி மக்களின் மொபைல் எண்களுக்கு மெசேஜ் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் உலா வருகிறது.

இந்த குறுந்தகவலை பயணாளர்கள் நம்ப வேண்டாம் எனவும், இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் மின் கட்டணத்தை கட்ட விரும்பினால் மின் அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் மட்டுமே கட்டலாம் எனவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் துறை சார்பில் ஏதேனினும் ஊழியர் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்ஆபில் மூலமாகவோ அணுகினால் அதை நம்ப வேண்டாம் எனவும் மின் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: TANGEDCO